கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் - திருச்சி சாலை, ராமநாதபுரம் பகுதியில் மேம்பால கட்டுமான பணிகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுவருகிறது. இதனால் அந்தச் சாலையில் பல்வேறு இடங்கள் குண்டும் குழியுமாக இருந்துவருகிறது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் அடிக்கடி விபத்துக்களும் ஏற்படுகின்றன.
இந்நிலையில் திருச்சி சாலை - நஞ்சுண்டாபுரம் சாலை சந்திப்பில் இருந்த குழிகளை அடைக்கும் பணிகள் நடைபெற்றபோது அங்குப் பணியிலிருந்த போக்குவரத்துக் காவலர்களும் இணைந்து கான்கிரீட் கலவை கொண்டு சாலையைச் சீரமைத்தனர்.
கலக்கிய காவலர்கள்
ராமநாதபுரம் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் தேவராஜ் உதவியுடன் கான்கிரீட் கலவை கொண்டு சாலைகளில் உள்ள குழிகளை சரிசெய்தனர். காவலர்களின் இந்தச் செயலுக்கு காவல் துறை உயர் அலுவலர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: காசு கேட்ட காவலரை கார் பேனட்டில் தூக்கிச்சென்ற பரபரப்பு சம்பவம்!