கோயம்புத்தூர்: இது குறித்து தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கரோனா தொற்றால் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இணைய வழியில் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி துறையில் பாடங்கள் நடைபெற்று வந்தது. இதில் 35 முதுகலைப் மேற்படிப்பு, 29 ஆராய்ச்சி படிப்புகளில் தேர்வுகளை இணைய வழியில் நடத்தி சாதனை படைத்துள்ளோம்.
தற்போது தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி ஜூலை 12ம் தேதியில் இருந்து முதுகலை, முனைவர் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள ஆராய்ச்சி கூடங்கள் திறக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.
அனைத்து வேளாண்மை உறுப்புக் கல்லூரிகளும், மாணவர்களை பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி செயல்படுத்தவும் உத்தரவிட்டுள்ளோம்" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாடு தடகள வீரர்களுக்கு ரூ.5 லட்சம் - முதலமைச்சர் அறிவிப்பு