திருப்பூர்: பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்க உள்ள அண்ணாமலைக்கு திருப்பூரில் கொடுக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில், அமித்ஷா பெரிய சங்கி, அண்ணாமலை சின்ன சங்கி என மாவட்ட தலைவர் பேசியதால் தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
தமிழ்நாடு பாஜக தலைவராக பொறுப்பேற்க செல்லும் அண்ணாமலைக்கு திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்க உள்ள அண்ணாமலையை வரவேற்று பேசிய திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் செந்தில்வேல், அமித்ஷா என்ற பெரிய சங்கியின் லேட்டஸ்ட் உற்பத்திதான் இந்த சின்ன சங்கி அண்ணாமலை. தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வருவது முக்கியமல்ல. தமிழ்நாடு மக்களுக்கு திராவிட திருட்டு கும்பலில் இருந்து விடுதலை பெற அண்ணாமலை முதலமைச்சர் ஆக வேண்டும் என்பது விதியாகும் எனவே திருப்பூருக்கு வருகை தந்துள்ள முன்னாள் காக்கியும், இந்நாள் சங்கியுமான அண்ணாமலை அவர்களை வரவேற்புரை ஆற்றுமாறு அழைக்கிறேன் என பேசினார்.
இந்தப் பேச்சால் அங்கு கூடியிருந்த பாஜகவினர் சற்று அதிர்ச்சியடைந்தனர். ஆனால், அண்ணாமலை சிரித்தபடியே இருந்தார். சங்கி என்ற வார்த்தை சமூக வலைதளங்களில் கலாய்ப்பதற்காக பயன்படுத்துவதால், செந்தில்வேல் பாராட்டினாரா கலாய்த்தாரா என தெரியாமல் பாஜகவினரே குழப்பத்தில் இருக்கின்றனர்.
இதையும் படிங்க: ஆண்டவனே நம்ம பக்கம் - அண்ணாமலை பஞ்ச்!