கோவை: வெள்ளிங்கிரி மலையிலுள்ள சிவன் கோயிலுக்கு செல்ல வனத்துறை தடை விதித்தது. இந்த நடவடிக்கை கோடைகாலத்தில் தண்ணீர் மற்றும் உணவை தேடி வனவிலங்குகள் வெள்ளிங்கிரி மலைப்பகுதிகளில் அதிகளவில் சுற்றித்திரிவதால், எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, மே 1ஆம் தேதி முதல் மலையேற அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பின. அந்த வகையில் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் தலைமையில், தடையை நீக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி ஆர்ப்பாட்டம் இன்று தொடங்கிய நிலையில், வனத்துறை தடையைத் திரும்பப் பெற்றது. இதனால் போராட்டம் நன்றி தெரிவிக்கும் கூட்டமாக மாற்றப்பட்டது.
இதையும் படிங்க: வெள்ளியங்கிரி மலைக்குப் போதிய பேருந்துகள் இல்லாததால் பக்தர்கள் அவதி