ETV Bharat / city

குளத்தில் தாமரை பூ பறிக்க முயன்ற சகோதரர்கள் நீரில் மூழ்கி பலி!

பேரூர் அருகே குளத்தில் இறங்கி தாமரை பூ பறிக்க முயன்ற இரண்டு சகோதரர்கள் சேற்றில் சிக்கி, நீரில் முழ்கி பரிதாபமாக இறந்தனர்.

The brothers drowned
The brothers drowned
author img

By

Published : Nov 30, 2020, 4:14 AM IST

கோயம்புத்தூர்: கோவை வடவள்ளியை அடுத்த கோரிமேடு பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆனந்த், ஹரி. இருவரும் சகோதரர்கள். இவர்கள் அதே பகுதியை சேர்ந்த ஒரு நண்பருடன் இருசக்கர வாகனத்தில் பேரூர் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது நாகராஜபுரம், கொலராம்பதி குளத்திலுள்ள தாமரை பூக்களைப் பார்த்து அதனை பறிப்பதற்கு விரும்பியுள்ளனர்.

ஆனந்த், ஹரி இருவரும் குளத்தில் இறங்கி தாமரையை பறிக்க முயன்றுள்ளனர்; நண்பர் கரையிலேயே இருந்துள்ளார். தாமரைப் பூ பறிக்க முயலும் போது ஹரியின் கால்கள் சேற்றில் சிக்கியுள்ளது. தண்ணீரில் தடுமாறிய ஹரியை காப்பாற்ற சென்ற ஆனந்தும் குளத்திலுள்ள சேற்றில் சிக்கி மூழ்கியுள்ளார்.

இதனை கண்ட கரையிலிருந்த நண்பர், அக்கம்பக்கத்தினர் அழைத்து வந்து சேற்றில் முழ்கியிருந்த ஹரியை சடலமாக மீட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மீட்புப் பணித்துறையினர் குளத்தில் மூழ்கி இருந்த ஆனந்தை சடலமாக மீட்டனர். இதுகுறித்து வடவள்ளி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: குளத்தில் மீன் பிடிக்க தடை: மீன் வலைகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்திய மீனவர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.