கோவை மாநகராட்சி ஆய்வுக் கூட்டத்தில் கரோனா பேரிடர் காலத்தில் பணியாற்ற தொகுப்பூதிய அடிப்படையில் ரூ. 12,000 ஊதியத்தில், 100 செவிலியர்களுக்கான பணிநியமன ஆணையை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.
மேலும், மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
![கோவையில் செவிலியர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கிய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/03:10:37:1623058837_tn-cbe-01-minister-nerhu-visu-tn10027_07062021130059_0706f_1623051059_939.jpg)
தொடர்ந்து, கோவை மாநகராட்சி கலையரங்கில் அமைக்கப்பட்டுள்ள கரோனா தடுப்புப் பிரிவு கட்டுப்பாட்டு அறையில் மாநகராட்சி அலுவலர்களிடம் அமைச்சர் நேரு ஆலோசனை நடத்தினார்.