ETV Bharat / city

விவசாய மசோதா: விவசாயிகளுக்கு முழு பாதுகாப்பு கிடைத்துள்ளது - கனகசபாபதி - full protection to farmers

கோயம்புத்தூர்: இந்த விவசாய மசோதாவால் விவசாயிகளுக்கு முழு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக பாஜக மாநில துணைத்தலைவர் கனகசபாபதி தெரிவித்தார்.

bjp
bjp
author img

By

Published : Sep 22, 2020, 5:03 PM IST

கோயம்புத்தூர் காந்திபுரம் பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில் பாஜக மாநில துணைத்தலைவர் கனகசபாபதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர், "விவசாய துறையில் இருந்த பெரும் கட்டுப்பாடுகளை பிரதமர் தளர்த்தியுள்ளார். இரண்டு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஒன்று வேளாண் விளைபொருள் வர்த்தக ஊக்குவிப்பு சட்டம், விவசாயிகளின் ஒப்பந்தம் அதிகாரம் மற்றும் பாதுகாப்பு சட்டம். இந்த மசோதாக்கள் மூலம் விவசாயிகள் விளைவிக்கும் பொருள்களை தாமாக கொண்டு சென்று ஒப்பந்தம் செய்து விற்பனை செய்ய முடியும்.

நேரடியாக நிறுவனங்களுக்கும் வாடிக்கையாளர்கள் தனது விளைபொருள்களை விற்று கொள்ள இயலும். இதில், இடைத்தரகர்கள் இல்லாமலேயே விவசாயிகள் பயனடையலாம். இந்த மசோதாவால் விவசாயிகளுக்கு முழு பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. விளைச்சல் வரையிலும் முழு உரிமை விவசாயிகளிடமே இருக்கும். இந்த மசோதா மூலம் மாநில உரிமைகள் நீர்த்துப்போகும் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவதில் உண்மையில்லை.

விவசாயிகளுக்கு பாதுகாப்பான மசோதா

மத்திய அரசு கிசான் ரயில் இந்த ரயில் சேவையை விவசாயிகளுக்காகவே அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் நாட்டின் பல்வேறு இடங்களுக்கு விவசாயப் பொருள்களை எடுத்துச் சென்று விற்பனை செய்ய முடியும். சுயசார்பு வேளாண்மைக்கு இந்த மசோதாக்கள் துணைபுரிகின்றன. இந்த ஆண்டில் 3 கோடியே 9 லட்சம் ரூபாய் விவசாய பொருள்கள் மத்திய அரசால் வாங்கப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: அவமதித்த எம்.பி.க்கள்... ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்க மாநிலங்களவை துணைத்தலைவர் முடிவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.