கோயம்புத்தூர், துடியலூரை சேர்ந்த சாய்நிகேஷ் ரவிசந்திரன் என்பவர் 2019 முதல் உக்ரைனில் உள்ள கார்கோ நேசனல் ஏரோஸ்பேஸ் பல்கலைக்கழகத்தில் விமானவியல் துறையில் படித்து வருகிறார். உக்ரைன் நாட்டில் தற்போது நடைபெறும் போர் காரணமாக அந்த நாட்டில் உள்ள ஜார்ஜியன் நேசனல் லிஜியன் எனும் துணை இராணுவ பிரிவில் இணைந்துள்ளது இந்திய உளவு அமைப்புகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிறு வயது முதலே இராணுவத்தில் சேர வேண்டும் என விரும்பிய சாய்நிகேஷ் ரவிசந்திரன், அதற்காக விண்ணப்பித்து இருந்தார்.உயரம் குறைவாக இருந்ததால் இந்திய இராணுவத்தில் அவர் சேர்க்கப்படவில்லை.
இந்நிலையில் உக்ரைனில் நடைபெறும் போர் காரணமாக அங்குள்ள துணை இராணுவ படையில் சாய்நிகேஷ் ரவிசந்திரன் சேர வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனையடுத்து ரஷ்யா உக்ரைன் போரில் அவர் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்திய மாணவர்கள் நாடு திரும்பி வரும் நிலையில் சாய்நிகேஷ் மட்டும் அந்த நாட்டிற்கு ஆதரவாக போர் புரிந்து வருவது மத்திய ,மாநில உளவுத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து சாய்நிகேஷின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் இடையே உளவுத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மேலூர் சிறுமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு - போலீசார் பலத்த பாதுகாப்பு