கோவை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தெலங்கானா ஆளுநர் தமிழிசை இன்று கோவை வந்தார். செட்டிப்பாளையத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை சிறிது நேரம் பார்த்து கண்டுகளித்தார்.
இதனையடுத்து கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரிக்கு வருகைதந்தார். அங்கு ரத்தினம் கல்விக் குழுமத்தின் வெளிநாட்டு மாணவர்களுக்கான நல்லுறவு மையத்தை திறந்துவைத்தார். பின்னர் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
மத்திய அரசின் ஸ்டெடி இந்தியா திட்டத்தின்கீழ் இந்த நல்லுறவு மையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலேயே சுமார் 70 நாடுகளைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்கள் படிக்கும் மையமாக ரத்தினம் கல்விக் குழுமம் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க; கோயில் திருவிழாவில் தண்ணீர் பந்தல் அமைத்த இஸ்லாமிய இளைஞர்கள்! - குவியும் பாராட்டுகள்