தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் நந்தகுமார் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தமிழ்நாடு தொழிற்சாலைப் பணிகளில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிறுவனத்தில் உதவி இயக்குனர் மற்றும் உதவி கண்காணிப்பாளர் ஆகிய பதவிகளுக்கு ஏப்ரல் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், தற்பொழுது கரோனா வைரஸ் பரவலால் கடைபிடிக்க வேண்டிய சமூக விலகல் காரணமாகவும், தற்பொழுது நிலவி வரும் அசாதாரணமான சூழ்நிலை காரணமாகவும் தேதி குறிப்பிடாமல் தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது. இந்தத் தேர்வுகள் நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.