Tamil Nadu Jallikattu Youth Council: கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஒரு சார்பினருக்கு மட்டும் டோக்கன்கள் விநியோகிக்கப்படுவதாக, தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவையினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
இது குறித்து பேசிய தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவைத் தலைவர், ”கோவையில் நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு சில அமைப்புகளைச் சார்ந்தவர்களுக்கு மட்டும் டோக்கன்கள் வழங்கப்பட்டு மிகப்பெரிய முறைகேடு நடைபெற்றுவருகிறது.
இதனால் விவசாயிகள் பலரும் பாதிக்கப்படுகின்றனர். அதைத்தான் கோவையில் நடைபெறும் ஜல்லிக்கட்டிற்குப் பிற மாவட்டங்களில் டோக்கன்கள் வழங்குகின்றனர்.
எனவே ஜல்லிக்கட்டு நடைபெறும், பொது இடத்திலேயே டோக்கன்கள் வழங்கப்பட வேண்டும். சில அமைப்புகள் தலையீட்டின் காரணமாகவே, இதில் அரசியல் தலையீடுகளும் வருகின்றன.
முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் டோக்கன்கள் வழங்கப்பட வேண்டும். இல்லை என்றால் எங்கள் பேரவை சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படும். ஜல்லிக்கட்டை என்றும் அரசியலாகப் பார்க்க வேண்டாம் எனத் தெரிவித்தனர்.
கோவையில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள எல்.என்.டி. புறவழிச்சாலையில் நேற்றைய தினம் (ஜனவரி 2) வேறொரு அமைப்பினர் டோக்கன்கள் வழங்கப்படுவதில் பாரபட்சம் பார்ப்பதாகக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கோடநாடு வழக்கு: தனபால், ரமேஷின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு