ETV Bharat / city

11 புதிய ரக பயிர்களை அறிமுகப்படுத்திய தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்!

author img

By

Published : Jan 15, 2021, 9:05 PM IST

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், பொங்கல் திருநாளன்று 11 புதிய ரக பயிர்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

11 புதிய வகை பயிர்கள் அறிமுகம்
11 புதிய வகை பயிர்கள் அறிமுகம்

கோயம்புத்தூர்: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் புதிய புதிய பயிர் ரகங்களை வேளாண் மற்றும் தோட்டக்கலை விவசாயிகளுக்காக அறிமுகம் செய்து வருகிறது. இந்த ஆண்டு பொங்கல் திருநாளான்று, 11 புதிய பயிர் ரகங்களை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 6 ரகங்கள் வேளாண்பயிர்கள், 4 ரகங்கள் தோட்டக்கலை பயிர்கள், 1 வனப்பயிராகும்.

இந்த புதிய ரகங்கள் குறித்து வேளாண் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளதாவது:

நெல் - கோ54- தமிழ்நாட்டின் சொர்ணவாரி, குறுவை, மற்றும் நவரை பருவங்களில் வளரக்கூடிய குறுகியகால ரகம் (110-115 நாட்கள்). 6400கிகி / ஹெக்டேர்.

நெல் எடிடீ 55- குறுவை, கோடைப்பருவ பயிர்.(115 நாட்கள்). 6000கிகி/ ஹெக்டேர். பாக்டீரியா இலையுறை கருகல் நோய் பாதிக்கும் பகுதிகளுக்கு ஏற்றது.(திருநெல்வேலி, கன்னியாகுமரி)

நெல் டிஆர்ஒய் 4- களர் மற்றும் உவர் நிலப்பயிர். (125-130 நாட்கள்). சம்பா, தாளடி, பின்சம்பா பருவ பயிர். 5800கிகி/ஹெக்டேர்.

கேழ்வரகு எடிஎல்1- தமிழ்நாட்டில் கேழ் வரகு பயிரிடும் அனைத்து பகுதிகளுக்கும் ஏற்றது. (110 நாட்கள்). இறவையில் 3130கிகி/ஹெக்டேர். மானாவாரியில் 2900கிகி/ஹெக்டேர்.

வரகு எடிஎல்1. வறட்சி யை தாங்கும் பயிர். (110 நாட்கள்). தானிய மகசூல் 2500கிகி/ஹெக்டேர், தட்டை மகசூல் 4400கிகி/ஹெக்டேர். கரிசல் மண் பகுதிக்கு ஏற்றது.

உளுந்து கோ7- ஆடி, புரட்டாசி மாத பயிர். (60-65 நாட்கள்). 880கிகி/ஹெக்டேர். கன்னியாகுமரி, நீலகிரி மாவட்டத்தை தவிர மற்ற பகுதிகளுக்கு ஏற்றது.

விஆர்எம்(கத்தரி) 2. 140 நாட்கள் வயதுடையது. 50 டன்/ஹெக்டேர். தொலைதூர விற்பனைக்கி ஏற்றது. வேலூர் ராணிப்பேட்டை திருப்பத்தூர் திருவண்ணாமலை கிருஷ்ணகிரி தர்மபுரி சென்னை மாவட்டங்களுக்கு ஏற்றது.

பீஎல்ஆர்3 - பலவருட பாலில்லா பலா ரகம். ஜூலை முதல் டிசம்பர் வரை மகசூல். வீட்டுத்தோட்டம் வணிகரீதியான பயிரிடவும் ஏற்ற ரகம்.

குடம்புள்ளி பிபிஐ(கு)1. சமையலுக்கு ஏற்ற பழ பயிர் ரகம். ஒரு மரத்திற்கு சராசரியாக 750 பழங்கள். அதிக மழை பெய்யும் பகுதிகள் மற்றும் கடல் மட்டத்திலிருந்து 500 மீட்டர் உயரம் வரை உள்ள பகுதிகளில் சாகுபடி செய்ய ஏற்றது.

விளாம்பழம்(டபுள்யு எப்எல்)3. தமிழகத்தில் தரிசு, களர் மற்றும் உவர் நிலங்களுக்கு ஏற்ற பழப்பயிர். மரத்திற்கு சராசரியாக 300 பழங்கள். 28டன்/ஹெக்டேர்.

மலைவேம்பு எம்டிபி3- வேகமாக வளரக்கூடிய இலை உதிர் வனப்பயிர். எட்டு வருடத்திலிருந்து பத்து வருடங்களுக்குள் அறுவடை செய்ய ஏற்றது. 50-70கிகி.ஹெக்டேர்.

இந்த11 புது ரகப்பயிர்களும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பல அதிகாரிகள் முன்னிலையில் 51வது மாநில பயிர் ரகங்கள் வெளியிட்டு குழுவால் அங்கீகரிக்கப்பட்டு அரசின் ஒப்புதலோடு பரிந்துரைக்கப்படுகிறது என தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : பரபரக்கும் பரப்புரை வாகனத்தில் உள்ள சிறப்பம்சம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.