இலங்கையை சேர்ந்தவர் சந்தன லசந்த பெரேரா என்ற அங்கோடா லொக்கா. பிரபல தாதாவான இவர் மீது போதைப் பொருள் கடத்தல் மற்றும் ஏழு பேரை கொலை செய்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் அங்கோடா அவரின் காதலி அமானி தாஞ்சியும் (27) மாயமானார். இருவரும் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பதுங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் அங்கோடா, கடந்த மாதம் (ஜூலை) 3ஆம் தேதி விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவரின் உடலை பிரதீப் சிங் என்பவர் போல் போலியான ஆவணங்கள் தயாரித்து மதுரையில் எரித்துள்ளதாக தெரியவருகிறது.
இது தொடர்பாக காவலர்கள் விசாரணை நடத்தி அங்கோடா காதலி அமானி தாஞ்சி, அவருக்கு உடந்தையாக இருந்த கோவை சிவகாமசுந்தரி, ஈரோடு தியானேஸ்வரன் உள்ளிட்டோரை கைதுசெய்தனர்.
அவர்களிடம் அங்கோடாவின் மரணம் தொடர்பாக காவலர்கள் மேற்கொண்டு விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: ரவுடி ஒருவரை சரமாரியாக வெட்டி கொலை செய்யும் சிசிடிவி காட்சி வெளியீடு!