கரோனா தொற்று காரணமாக ஆகஸ்ட் மாதம் அரியர் மாணவர்கள் தேர்ச்சி என அரசு அறிவித்தது. மேலும் இறுதியாண்டு தேர்வு இணைய வழியில் நடத்தவும் முடிவு எடுக்கப்பட்டது.
ஆனால் இதற்கு யுஜிசி ஒப்புதல் அளிக்காததல் அரியர் மாணவர்கள் தேர்ச்சி முடிவுகள் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உயர்கல்வி மேற்படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியதால் அரியர் மாணவர்கள் அதில் கலந்து கொள்ள முடியவில்லை.
எனவே உடனடியாக அரசு அரியர் மாணவர்களின் தேர்ச்சி முடிவுகளை வெளியிட வேண்டும் எனக் கூறி தமிழ்நாடு முழுவதும் எஸ்எப்ஐ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று (அக. 21) கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு எஸ்எப்ஐ அமைப்பினர் தேர்வு எழுதி காத்திருப்பது போல் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!