ETV Bharat / city

இலங்கை ரவுடி மரணம் குறித்து விசாரிக்க ஏழு தனிப்படை - ஐ.ஜி சங்கர்

கோவை: இலங்கை ரவுடி அங்கோடா லொக்கா மரணம் குறித்த வழக்கை விசாரிக்க ஏழு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக, ஐ.ஜி சங்கர் தெரிவித்துள்ளார்.

Sri Lankan Rowdy
author img

By

Published : Aug 4, 2020, 3:17 PM IST

இலங்கை ரவுடி அங்கோடா லொக்கா மரணம் குறித்த வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. ஐ.ஜி சங்கர் தலைமையில், இந்த விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. இதுகுறித்து, இன்று (ஆக.4) கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவகத்தில் ஐ.ஜி.சங்கர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் கூறிய ஐ.ஜி சங்கர், "ரவுடி அங்கோடா லொக்கா மரணம் குறித்து, இதுவரை இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை விசாரணை செய்ய டி.எஸ்.பி., சிபிசிஐடி ராஜு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை விசாரணை செய்ய ஏழு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஐ.ஜி சங்கர் செய்தியாளர் சந்திப்பு!

இந்த குழுக்கள் பல்வேறு இடங்களில், பல்வேறு கோணங்களில் தங்கள் விசாரணையை மேற்கொள்வார்கள். அதைத்தொடர்ந்து, இறுதி அறிக்கையை தாக்கல் செய்வார்கள். இந்த வழக்கில், இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமும் விசாரணை நடத்திய பின்புதான் இதில் ஒரு முடிவு தெரியவரும்" என்றார்.

இதையும் படிங்க: வழிமறித்த யானைகளுக்குப் பயந்து புளிய மரத்தில் ஏறிய ஓட்டுநர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.