நாளுக்கு நாள் பல்வேறு காரணங்களுக்காக மரங்கள் வெட்டப்பட்டு, இயற்கை வளங்கள் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் மரங்களை உருவாக்கி இயற்கை வளங்களை மேம்படுத்தும் வகையில் பொள்ளாச்சி அருகே உள்ள தனியார்ப் பள்ளியில் மாணவ மாணவிகள் விதைப்பந்துகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். செம்மண், இயற்கை உரங்களைக் கொண்டு அரசு, புங்கன், வேப்பம், புளி போன்ற விதைகளைக் கொண்டு மாணவ மாணவிகள் 15 ஆயிரம் விதைப்பந்துகளை உருவாக்கினர்.
மாணவ, மாணவிகள் தயாரித்த விதைப்பந்துகள் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொள்ளாச்சி அருகே உள்ள வனப் பகுதிக்குச் சென்று வீச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அண்மைக் காலங்களாக மனிதர்கள் மரங்களை வெட்டி கட்டடங்களை உருவாக்கும் நிலை உள்ளது.
மேலும், இயற்கைச் சீற்றங்களால் வனங்களில் உள்ள மரங்களின் பரப்பளவு குறைந்து வருவதால், அங்கு வாழும் வனவிலங்குகள் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. எனவே மரங்களை அதிகமாக உருவாக்கி இயற்கை வளங்களை மேம்படுத்தும் நோக்கில் இந்த விதை பந்துகளைத் தயாரித்து வருவது மகிழ்ச்சி அளிப்பதாக மாணவ, மாணவிகள் தெரிவித்தனர்.