கோயம்புத்தூர்: வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் கோயம்புத்தூர் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு எரிக்கப்படுகிறது. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 7) வழக்கம்போல் குப்பைக் கிடங்கில் டிப்பர் லாரி ஓட்டுநர் குப்பைகளைக் கொட்டியுள்ளார். அப்போது அங்கு நின்றிருந்த தூய்மைப் பணியாளர் சிவகாமி என்பவர் குப்பைகளுக்கிடையே சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.
உடனே அவர் சத்தமிடவே சக தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை அகற்றி அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர் அதற்குள் மூச்சுத் திணறி உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து போத்தனூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை... பல் மருத்துவர் சரண்...