ETV Bharat / city

ஓய்வு பெற்ற தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ. 30 லட்சம் கொள்ளை - இருவர் கைது! - கோவையில் 30 லட்சம் கொள்ளை

கோயம்புத்தூர்: ஓய்வு பெற்ற தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ. 30 லட்சம், 10 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்தது தொடர்பாக காவல் துறையினர் இருவரைக் கைது செய்துள்ளனர்.

home-robbery-two-arrested-in-coimbatore
home-robbery-two-arrested-in-coimbatore
author img

By

Published : Sep 22, 2020, 9:42 AM IST

கோயம்புத்தூர் மாவட்டம் சரவணம்பட்டி பகுதியை சேர்ந்தவர் துரைசாமி. ஓய்வு பெற்ற தனியார் நிறுவன ஊழியரான அவர் கடந்த 3ஆம் தேதி உறவினர் திருமணத்திற்காக வெளியூர் சென்றுவிட்டு அடுத்த நாள் வீடு திரும்பினார்.

அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கபட்டிருந்த ரூ. 30 லட்சம் பணம், 10 சவரன் தங்க நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது.

அதையடுத்து அவர் கொள்ளை சம்பவம் குறித்து சரவணம்பட்டி காவல் துறையில் புகார் அளித்தார். அதனடிப்படையில் கொள்ளையர்கள் தீவிரமாக தேடப்பட்டுவந்தனர். இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி காரமடை பகுதியைச் சேர்ந்த கணேஷ் குமார்(34) மற்றும் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அடுத்த பாளையம்பட்டி பகுதியைச் சேர்ந்த பிரசாத் ராஜா(27) ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள் துரைசாமியின் வீட்டில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அதையடுத்து அவர்களிடமிருந்து 16 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் ஐந்தரை சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன்பின் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: வழக்கறிஞர் வீட்டை உடைத்து 40 சவரன் நகைகள் கொள்ளை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.