ETV Bharat / city

பாய்ந்தோடிய காளைகள்: களைகட்டிய அன்னூர் ரேக்ளா பந்தயம் - ரேக்ளா பந்தயம் கோவை

அன்னூர் அருகே இளைஞர்களும், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கமும் சேர்ந்து நடத்திய ரேக்ளா பந்தயத்தில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

rekla race in annur coimbatore
பாய்ந்தோடியக் காளைகள்! களைகட்டிய அன்னூர் ரேக்ளா பந்தயம்
author img

By

Published : Jan 26, 2020, 7:57 PM IST

கோவை மாவட்டம் அன்னூர் அடுத்துள்ள கெம்பநாயக்கன்பாளையம் கிராமத்தில் ஆண்டுதோறும் ரேக்ளா பந்தயம் நடத்துவது வழக்கம். அதேபோல் இந்தாண்டு நாட்டு மாடுகள் பூட்டப்பட்ட இரட்டை மாட்டு வண்டிகளில் ரேக்ளா பந்தயம் நடத்தப்பட்டது.

பெரியபுத்தூர் செல்லாண்டியம்மன் கோயிலிலிருந்து கெம்பநாயக்கன்பாளையம் கிராமம் வரை ஐந்து கிலோமீட்டர் தொலைவிற்கு நடத்தப்பட்ட இப்போட்டியில் 30-க்கும் மேற்பட்ட இரட்டை மாட்டுவண்டிகள் கலந்துகொண்டன. உள்ளூர் இளைஞர்கள் கலந்துகொண்டு மிகுந்த உற்சாகத்தோடு போட்டிபோட்டு வண்டிகளை ஒட்டிச்சென்றனர்.

TVS iQube Electric : டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் மின்சார ஸ்கூட்டர்!

சிறிய காளைகள், பெரிய காளைகள் என நடத்தப்பட்ட போட்டியில், சிறிய காளைப் பிரிவில் விளவை பகுதியைச் சேர்ந்த விஸ்வா, சுரேஸ் ஆகியோரும், பெரிய காளைப் பிரிவில் கோவில்பாளையம் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமாரும் வெற்றிபெற்றனர்.

பாய்ந்தோடிய காளைகள்! களைகட்டிய அன்னூர் ரேக்ளா பந்தயம்

இவர்களுக்கு கிராம மக்கள் சார்பிலும், கட்சிசார்பற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பிலும் பரிசு கோப்பைகளும், பணமுடிப்பும் வழங்கப்பட்டன.

Intro:அன்னூர் அருகே இளைஞர்கள் மற்றும் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் நடத்திய ரேக்ளா போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது...Body:கோவை மாவட்டம், அன்னூர் அடுத்துள்ள கெம்பநாயக்கன்பாளையம் கிராமத்தில் ஆண்டு தோறும் ரேக்ளா பந்தயம் நடத்துவது வழக்கம் அதே போல் இந்த ஆண்டு நாட்டு மாடுகள் பூட்டப்பட்ட இரட்டை மாட்டு வண்டிகளில் ரேக்ளா பந்தயத்தை நடத்தப்பட்டது. பெரியபுத்தூர் செல்லாண்டியம்மன் கோவிலில் இருந்து கெம்பநாயக்கன்பாளையம் கிராமம் வரை ஐந்து கிலோமீட்டர் தொலைவிற்கு நடத்தப்பட்ட இப்போட்டியில் 30க்கும் மேற்பட்ட இரட்டை மாட்டுவண்டிகள் கலந்து கொண்டன. உள்ளூர் இளைஞர்கள் மிகுந்த உற்சாகத்தோடு கலந்துகொண்டு போட்டி போட்டுக்கொண்டு ஒன்றுக்கொன்று முந்தி செல்ல வண்டிகளை ஒட்டிச்சென்றனர்.சிறிய காளைகள்,பெரிய காளை என மூன்று பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டியில் சிறிய காளை பிரிவில் விளவை பகுதியை சார்ந்த விஸ்வா,சுரேஸ் ஆகியோரும், பெரிய காளை பிரிவில் கோவில்பாளையம் பகுதியை சார்ந்த முத்துக்குமாரும் வெற்றி பெற்றனர்.இவர்களுக்கு கிராமமக்கள் சார்பிலும் கட்சிசார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பிலும் பரிசு கோப்பைகளும் பணமுடிப்பும் வழங்கப்பட்டன.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.