கோயம்புதூர் : கோவையில் கடந்த சில தினங்களாக சாரல் மழை பெய்து வருவதால் இங்குள்ள குளங்கள், ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அதே சமயம் கோவையின் பல இடங்களில் நீர் தேங்கி உள்ளது.
அதன் ஒரு பகுதியாக, கோவை அரசு மருத்துவமனையில் உள்ள பழைய பிணவறை முன் தேங்கி நிற்கும் மழை நீரால், அங்கு வைக்கப்பட்டுள்ள உடல்களை எடுத்து சென்று உறவினர்களிடம் ஒப்படைக்கு போது பெரும் சிரமம் நிலவி வருகிறது. ஊழியர்களும் வேலை செய்ய சிரமம் ஏற்பட்டுள்ளது. அதே சமயம் வழக்கமாக அங்கு நிற்கும் ஆம்புலன்ஸ்களும் மழை நீரில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களிடமிருந்து மருத்துவமனை நிர்வாகத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சுற்றுப்புறச் சூழல், நீர்நிலைகளை பாதுகாக்க தவறிய அதிமுக - கனிமொழி குற்றச்சாட்டு