ETV Bharat / city

'தனியார் மருத்துவமனைகள் மனசாட்சியோடு செயல்பட வேண்டும்' அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

கரோனா நோயாளிகளிடம் கட்டணம் வசூலிப்பதில் தனியார் மருத்துவமனைகள் மனசாட்சியோடு செயல்பட வேண்டும் என, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Minister Ma Subramanian
அமைச்சர் மா.சுப்பிரமணியம்
author img

By

Published : May 16, 2021, 9:09 AM IST

Updated : May 16, 2021, 9:14 AM IST

கோயம்புத்தூர்: கரோனா தொற்றுத் தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம், கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் ஆகியோர் தலைமை வகித்தனர்.

இக்கூட்டத்தின் முடிவில், கோயம்புத்தூர் மாவட்ட அதிமுக கூட்டணி சட்டப்பேரவை உறுப்பினர்கள், கோயம்புத்தூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டி 13 அம்ச கோரிக்கை அடங்கிய மனுவை அமைச்சரிடம் வழங்கினர். மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 8 அம்ச கோரிக்கை அடங்கிய மனுவும் வழங்கப்பட்டது. பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது," தமிழ்நாட்டில் கரோனா தொற்றுப் பரவல் வேகமாகவுள்ளது. தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தைக் கடக்கிறது. தற்போது நடந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு கருத்துகள், ஆலோசனைகள் பகிரப்பட்டன. கோயம்புத்தூர், சேலம், மதுரை, திருச்சி உள்ளிட்ட மாநகர்களில் சென்னையில் இருப்பது போன்று 'வார் ரூம்' தொடங்கப்படவுள்ளது என்று முதலமைச்சர் எங்களிடம் தெரிவித்துள்ளார்.

கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சைக்கு கட்டணம் வசூலிப்பதில் தனியார் மருத்துவமனைகள் மனசாட்சியோடும், மனிதநேயத்துடனும் நடந்து கொள்ள வேண்டும். ரெம்டெசிவிர் மருந்துகள் அரசுக்கு குறைவாகவே வருகிறது.

மருத்துவமனைகளும் அதிகமாக அந்த மருந்தை பரிந்துரை செய்வதால் மக்கள் அந்த மருந்தை வாங்க விற்பனை மையங்களில் குவிந்து வருகின்றனர்.

மேலும் முதலமைச்சர் பொறுப்பேற்ற பிறகு, கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மிக வேகமாக எடுக்கப்பட்டு வருகிறது. 18 வயது முதல் 45 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்குத் தடுப்பூசி போடுவதற்கு ரூ.45 கோடி மதிப்பில் 15 லட்சம் தடுப்பூசிகள் கோரப்பட்டு, ஐந்து லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. கோயம்புத்தூரில் படுக்கை வசதிகளைக் அதிகரித்து சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி உள்ளிட்ட சிகிச்சைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அதேசமயம் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தட்டுபாடு இல்லாமல் கிடைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறைந்தளவில் ஆக்ஸிஜன் பயன்படுத்தி நோயாளிகளைக் சிறப்பாக மருத்துவர்கள் குணமாக்கி வருவது பாராட்டுக்குரியது. அரசு மருத்துவனையில் கரோனாவால் இறந்தவர்களின் உடல்களைக் வைக்கப் போதிய வசதி இல்லை என்று உணவுத்துறை அமைச்சர் கூறினார். அதனால் உடல்களைக் வைக்க கூடுதல் இடங்கள் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இக்கூட்டத்தில் கோயம்புத்தூர் மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மாவட்ட ஆட்சியர் நாகராஜ், கோயம்புத்தூர் அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா, கோயம்புத்தூர் மாவட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: '10 லட்சம் ரூபாய் வழங்கிய அசுரன்; வனமகனும் சளைத்தவர் அல்ல'

Last Updated : May 16, 2021, 9:14 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.