ETV Bharat / city

விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்...நாளை ஆலோசனை கூட்டம் - coimbatore

விசைத்தறிகளுக்கு மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேலை நிறுத்தம் செய்வது குறித்து நாளை (செப்.11) கமிட்டி கூடி இது குறித்து அறிவிக்கவுள்ளதாகக் கோவை திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்...நாளை ஆலோசனை கூட்டம்

author img

By

Published : Sep 10, 2022, 8:22 PM IST

கோயம்புத்தூர்: தமிழ்நாடு மின்வாரியம் இன்று முதல் புதிய கட்டண உயர்வை கொண்டு வந்துள்ள நிலையில், இந்த கட்டண உயர்வு குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்டு கூட்டம் நடத்திய மின்சார ஒழுங்கு முறையான மின் கட்டண உயர்வுக்கு அனுமதி அளித்தது. இதனையடுத்து புதிய மின் கட்டணமானது நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்நிலையில் விசைத்தறிகளுக்கு மின் கட்டண உயர்வு கூடாது என விசைத்தறியாளர்கள் அரசிடம் வலியுறுத்தி கோரிக்கை விடுத்தது. ஏற்கனவே மின்கட்டண உயர்வு அறிவித்த போதே , இந்த கட்டண உயர்வை திரும்ப பெறவில்லை எனில் வேலை நிறுத்த போராட்டம் நடத்த போவதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து கோவை திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் பழனிச்சாமி கூறுகையில்,

“விசைத்தறியாளர்களின் கோரிக்கை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படாதது எங்களுக்கு வேலைநிறுத்தம் செய்வதை தவிர வேறு வழி இல்லை. நாளை இது தொடர்பாக கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் ஒன்று கூடி முடிவெடுக்க உள்ளோம்.

மின் கட்டணம் யூனிட் ஒன்றிக்கு 1.40 ரூபாய் வரை விசைத்தறிகளுக்கு உயர்த்தப்பட்டுள்ளது, சாதாரண விசைத்தறியாளர்களுக்கு வாழ்வா , சாவா என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

விசைத்தறி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் பழனிச்சாமி பேட்டி

கடந்த 6 மாதமாக நூல் ,பஞ்சு விலை உயர்வு உட்பட பல்வேறு காரணங்களால் விசைத்தறி தொழில் பாதிக்கப்பட்ட நிலையில் , புதிய கட்டண உயர்வால் வேலையே இல்லாமல் முடங்கி , தமிழ்நாட்டில் தொழில் வளமே இல்லாத நிலை ஏற்படும். இதை தமிழ்நாடு அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்”, என தெரிவித்தார்.

இதையும் படிங்க: செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் - அண்ணாமலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.