கோயம்புத்தூர்: அவிநாசி சாலை கொடிசியா வளாகத்தில் கரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. அங்கு 300க்கும் மேற்பட்டவர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இன்று(ஜன.14) பொங்கல் விழாவை முன்னிட்டு அங்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் கொடிசியா வளாகத்திற்குள்ளேயே பொங்கல் வைத்து கொண்டாடினர். அங்கு அவர்களுக்கு உணவு வழங்கும் பாத்திரங்களைக் கொண்டு, பொங்கல் சமைத்து கும்மிப்பாட்டு பாடி பொங்கலை கொண்டாடினர்.
இம்மையத்தில் சிகிச்சை பெறுபவர்கள், தங்களைப் பார்க்க வரும் உறவினர்களிடம் கரும்பு, வண்ண கோலப்பொடிகள் வாங்கித் தர சொல்லி, வளாகத்திற்குள்ளே வண்ண கோலமிட்டு, கரும்புகள் வைத்து பொங்கல் சமைத்துக் கொண்டாடினர்.
இதையும் படிங்க: வண்ணமயமான வடசென்னை: கோலமிட்டுப் பொங்கலை வரவேற்ற பெண்கள்!