கோயம்புத்தூர்: பொள்ளாச்சியில் அனைத்து காவலர்கள் குடும்பத்துடன் சமத்துவ பொங்கல் திருவிழா கொண்டாடினர்.
தமிழ்நாடு காவல்துறை கோயம்புத்தூர் பொள்ளாச்சி உட்கோட்ட பிரிவு காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர் குடும்பங்கள் பொதுமக்கள் கலந்துகொண்ட காவல் துறை பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டி தனியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
இதில் காவலர்கள் மற்றும் பொதுமக்கள், குழந்தைகள் விளையாட்டுப் போட்டிகள் கிரிக்கெட், லெமன்ஸ்பூன், கபடி, வாலிபால், கையிறு இழுக்கும் போட்டி, சோர் விலையாட்டு, சாக்கு போட்டி, ஒட்ட பந்தயம் என பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
கோவை மேற்கு மண்டல ஐஜி பெரியய்யா, டிஜஜிநரேந்திரா நாயர், கோவை மாவட்ட கண்காணிப்பாளர் ரா அருள்ராசு ஆகியோர் விளையாட்டில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். இந்த நிகழ்வில், துணை கண்காணிப்பாளர் கே.ஜி சிவக்குமார், ஆய்வாளர்கள் வைரம் விஜயன், வெற்றிவேலவன், முரளி, நிர்மலாதேவி , உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திரா பிரசாத், சரவணன், கதிர்வேல், ராஜேஷ் கண்ணா மற்றும்காவல் துறையை சேர்ந்த குடும்பத்தினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிழ்ச்சியை தனிபிரிவு உதவி ஆய்வாளர் மைக்கேல் சகாயராஜ் தொகுத்து வழங்கினர்.
இதையும் படிங்க: 'திராவிடக் கட்சிகள் பெண்களுக்கு மரியாதை தருவதில்லை': காயத்ரி ரகுராம்