கோவை மாவட்டம், பொள்ளாச்சி (வடக்கு) சட்டப் பேரவைத் தொகுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஒன்றியக்குழு தலைவர் விஜயராணி ரங்கசாமி தலைமையில் வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், "பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களுக்கு சாலை வசதிகள், பாலங்கள், 24 மணி நேரமும் அம்பராம்பாளையம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளை இந்த அரசு தொடர்ந்து செய்யும்" எனத் தெரிவித்தார்.
மேலும் இதில், துணைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அசோகன், விவேகானந்தன், பொள்ளாச்சி (வடக்கு) ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஆகியோரும் பங்கேற்றனர்.