தர்மபுரி மாவட்டம் அரூர் காவல்துறை துணை கண்காணிப்பாளராகப் பணியாற்றிய தமிழ்மணி பொள்ளாச்சி காவல் துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.
இதனையடுத்து பொள்ளாச்சி காவல் துணை கண்காணிப்பாளராக தமிழ்மணிஇன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
இவர் கடந்த 2018ஆம் ஆண்டு போட்டித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று 2019ஆம் ஆண்டு விருதுநகரில் பயிற்சி காவல்துறை கண்காணிப்பாளராக பணிபுரிந்தார்.
அதைத்தொடர்ந்து 2020ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்டம் அரூரில் பணியாற்றி வந்தார். தற்போது பொள்ளாச்சி காவல்துறை கண்காணிப்பாளராக புதியதாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பத்திரிகையாளர்களிடம் அவர் பேசியதாவது;-
"பொள்ளாச்சி பகுதியில் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.