ETV Bharat / city

வன உயிரின வாரத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு ஓவியப் போட்டி! - பொள்ளாச்சியில் வன உயிரின வார கொண்டாட்டம்

கோவை: பொள்ளாச்சி தனியார்ப் பள்ளியில் வனத்துறை சார்பில் வன உயிரின வார விழா நடைபெற்றது. அதில் ஏராளமான மாணவர்களுக்கு ஓவியம் உள்ளிட்டப் போட்டிகள் நடத்தப்பட்டன

school-students-participated-in-drawing-competition
author img

By

Published : Sep 21, 2019, 11:40 PM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் வருடந்தோறும் அக்டோபர் முதல் வாரத்தில் வன உயிரின வார விழா கொண்டாடப்படுவது வழக்கம். இதை முன்னிட்டு ஜமீன்ஊத்துக்குளி தனியார் பள்ளியில், வன விலங்குகள் குறித்து பள்ளி மாணவியர்களுக்கு ஓவிய, பேச்சு, கட்டுரை உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.

பள்ளி மாணவர்கள் ஓவியப் போட்டி

இது குறித்து அந்த மாவட்ட வன அலுவலர் மாரிமுத்து கூறும் போது, "ஆனைமலை புலிகள் காப்பகம் சார்பில் வன விலங்குகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இடையேயான பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

அதில் வெற்றி பெறும் மாணவியர்களுக்கு வரும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி பிறந்த நாளை முன்னிட்டு டாப்சிலிப்பில் உள்ள பழங்குடியின மக்களின் உண்டு உறைவிடப் பள்ளியில் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.

கோவை மாவட்ட வன அலுவலர் மாரிமுத்து பேட்டி

இதில் அந்த பழங்குடியின மக்களின் பாரம்பரியம் குறித்தும், டாப்சிலிப் சுற்றுலா மையம் குறித்தும் மாணவ, மாணவியர்களுக்கு தெரிவிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வனத்துறையினருக்கு உதவியாக இருக்கும் ஊடகம் உள்ளிட்ட பல்வேறு துறையினருக்கும் பரிசுகள், சான்றிதழ் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:

ஓசோன் தினம் - அரியலூர் அரசுக் கல்லூரியில் விழிப்புணர்வு போட்டிகள்

Intro:forestBody:forestConclusion:பொள்ளாச்சி தனியார் பள்ளியில்வனத்துறை சார்பில் வன உயிரின வார விழா நடைபெற்றது.பொள்ளாச்சியில்வருடந்தோறும் அக்டோபர் முதல் வாரத்தில் கொண்டடப்பட்டு வருகிறது இதையடுத்துவன விலங்குகள் குறித்து பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இடையோன, ஓவியப் போட்டி,பேச்சுப்போட்டி கட்டுரைப்போட்டிஜமீன் ஊத்துக்குளி நாச்சியார் வித்யாலயம் பள்ளியில் நடைபெற்றது இது குறித்து மாவட்ட வன அலுவலர் மாரிமுத்து கூறும் போது ஆனைமலை புலிகள் கப்பகத்துக்கு சார்பில் வன விலங்குகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இடையான ஓவியப் போட்டி, கட்டுரை போட்டி, பேச்சு போட்டி என பல்வேறு போட்டிகள் நடந்தப்பட்டு வெற்றி பெறும் மாணவ, மாணவியர்களுக்கு வரும் அக்டோபர் 2ம் காந்தி பிறந்த நாள் முன்னிட்டு டாப்சிலிப் உண்டு உறவிடப் பள்ளியில் பரிசுகள் வழங்கப்படுகிறது, இதில் டாப்சிலிப் பழங்குடி இன மக்கள் பாரம்பரியம் குறித்தும், டாப்சிலிப் சுற்றுலா மையம் குறித்து மாணவ, மாணவியர்களுக்கு தெரிவிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தன்னார்வலர்கள் மற்றும் அமைப்புகளுக்கு சான்றிதழ் வழங்க வனத்துறை சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார். பேட்டி- மாரிமுத்து(மாவட்ட வன அலுவலர் )

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.