கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி திமுக நகர முரசொலி மன்ற துணை செயலாளர் நாகராஜ் மற்றும் சுதர்சன் ஆகிய இருவரும் அவர்களுடைய முகநூல் பக்கத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் அவருடைய மகனையும் சம்பந்தமில்லாமல் இழிவாகவும், வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் சித்தரித்து பரப்பி உள்ளனர்.
இதுதொடர்பாக அதிமுக கட்சியின் கோவை புறநகர் தெற்கு மாவட்ட தொழில்நுட்ப பிரிவு மாவட்ட இணைச் செயலாளர் சதீஷ் குமார் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் திமுகவைச் சேர்ந்த இருவரையும் பொள்ளாச்சி நகர கிழக்கு காவல்துரையினர் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்துவருகிறது.