பொள்ளாச்சியில் பாலியல் வழக்கு கடந்த 2019ஆம் தேதியில் இருந்து நடைபெற்று வரும் நிலையில், கடந்த ஜனவரி 5ஆம் தேதி மேலும் மூன்று பேர் (ஹெரன்பால், பாபு, அருளானந்தம்) கைதாகினர். அவர்கள் 6ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு கோபி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கு குறித்து விசாரணை நடைபெற்றுவரும் நிலையில் நேற்று (பிப். 17) மூன்று பேரும் காணொலி மூலமாக கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கினை விசாரித்த தலைமை நீதிபதி மூன்று பேருக்குமான நீதிமன்றக் காவலை மார்ச் 3ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பொள்ளாச்சி பாலியல் வழக்கு: கைதான 3 பேரின் நீதிமன்ற காவல் நீடிப்பு!