ETV Bharat / city

மனைவிக்கு சினிமா மீது மோகம், கணவனுக்கு வேறு பெண்ணுடன் சல்லாபம்! - நடந்தது என்ன..? - கணவனுக்கு வேறு பெண்ணுடன் காமம்

கோயம்புத்தூர்: மனைவி, மாமியார் மீது சரமாரியாக கொலைவெறித் தாக்குதல் நடத்திய கணவனை காவல் துறை கைது செய்து விசாரித்து வருகிறது.

police with extra marital affairs arrested  police arrested by cops for attacking wife in coimbatore  மனைவிக்கு சினிமா மீது மோகம்  கணவனுக்கு வேறு பெண்ணுடன் காமம்  கோவையில் மனைவியைத் தாக்கிய போலீஸ் கைது
police arrested by cops for attacking wife in coimbatore
author img

By

Published : Dec 6, 2019, 9:07 PM IST

கோவை பெரிய கடை வீதி முதல்நிலை போக்குவரத்துக் காவலராக அய்யலு கணேசன்(38) பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஸ்ரீஜா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கணேஷனுக்கு இரண்டு வருடங்களாக கோவைப் புதூரைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணத்திற்கு மீறிய உறவு இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து மனைவியை சித்ரவதை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக பத்து மாதங்களுக்கு முன் கணவரைப் பிரிந்த ஸ்ரீஜா, சுண்டக்காமுத்தூரிலுள்ள தனது அம்மா ஓமனா வீட்டில் தனது மகன், மகளுடன் வாழ்ந்து வருகிறார். இச்சூழலில் தனது அம்மா வீட்டிற்கு வரும் கணவர் கணேசன், தன்னை அடித்து துன்புறுத்துவதாகக் கூறி, ஸ்ரீஜா பேரூர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இப்புகாரைத் தொடர்ந்து காவல் துறையினர், ஸ்ரீஜாவை சமாதானம் செய்து அனுப்பியதாகத் தெரிகிறது.

தெலங்கானா மக்கள் கொண்டாடும் ரியல் சிங்கம்!

இதனைத் தொடர்ந்து இரண்டு மாதத்திற்கு முன்பு மனைவி ஸ்ரீஜாவை கணேசன் மீண்டும் தாக்கியதாக, ஸ்ரீஜா மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளரிடம் புகாரளித்துள்ளார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கண்காணிப்பாளர் உறுதியளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது. இது தொடர்ந்து வந்த நிலையில், நேற்றும் இதே சம்பவம் அரங்கேற, தனது மகள் அடிவாங்குவதைப் பார்த்த ஓமனா, கணேசனை தடுக்க முற்பட்டபோது ஓமனாவையும், மனைவி ஸ்ரீஜாவையும் கடுமையாகத் தாக்கியுள்ளார்.

சத்தீஷ்கரில் நடன மங்கை கூட்டு பாலியல் வன்புணர்வு.!

இதனிடையே ஸ்ரீஜாவின் முகத்தில் இருந்து ரத்தம் நிற்காமல் வழிந்ததால், அவசர ஊர்தி வரவழைக்கப்பட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த, ஸ்ரீஜாவிற்கு முகத்தில் பட்ட காயத்திற்கு மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொள்ளுமாறு கூறியுள்ளனர்.

ஸ்ரீஜாவை பரிசோதனைக்குக் கொண்டு செல்லும் வழியில், கணேசன் தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் மனைவியின் கழுத்தை அறுக்க முற்பட்டுள்ளார்.

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு - மாணவியின் தாயாருக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

அப்போது ஸ்ரீஜா தனது இரு கைகளையும் கழுத்து பகுதியில் வைத்து தடுக்க முயற்சிக்கையில், வலது கைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு ஒன்பது தையல் போடப்பட்டது. அருகில் இருந்தவர்கள் கணேசனைப் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். ஸ்ரீஜா தற்போது கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

கஞ்சா வழக்கில் கைது - பிறப்புறுப்பில் ஆசிட் ஊற்றி கொடுமை செய்த போலீசார்!

இச்சம்பவம் குறித்து பேரூர் காவல் துறையினர் கணேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்ரீஜா திருமணத்திற்கு முன்பே சினிமாவில் நடித்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஐந்து ஆண்டுகளாக சினிமா படத்தில் நடிக்காமல் இருந்துள்ளார். காவல் துறையினர் கணேசனிடம் நடத்திய விசாரணையில் சினிமா படத்தில் நடிக்க , ஸ்ரீஜா அனுமதி கேட்ட போது, அதை மறுத்ததால் தான் பிரச்சனை ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

Intro:கோவையில் மனைவி மாமியாரை தாக்கிய காவலர் கைதுBody:கோவை பெரிய கடை வீதி முதல்நிலை போக்குவரத்து காவலராக அய்யலு கணேசன் (38) பணிபுரிந்து வருகிறார்.. இவருக்கு ஸ்ரீஜா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர்.அய்யலு கணேஷனுக்கு கடந்த இரண்டு வருடங்களாக கோவைப் புதூரைச்சேர்ந்த ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து மனைவியை சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது.இதன் காரணமாக கடந்த பத்து மாதங்களுக்கு முன் கணவரைப்பிரிந்த ஸ்ரீஜா சுண்டக்காமுத்தூரிலுள்ள, தனது அம்மா ஓமனா வீட்டில் தனது மகன், மகளுடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் தனது அம்மா வீட்டிற்கு வரும் அய்யலு கணேசன்,தன்னை அடிக்கடி அடித்து துன்புறுத்துவதாக கூறி ஸ்ரீஜா,பேரூர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இதனையடுத்து காவல் துறையினர் , ஸ்ரீஜாவை சமாதானம் செய்து அனுப்பியுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு மனைவி ஸ்ரீஜாவை கணவன் அய்யலு கணேசன் தாக்கியது தொடர்பாக , ஸ்ரீஜா மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாக புகாரளித்துள்ளார்.இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கண்காணிப்பாளர் உறுதியளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று சுண்டாகமுத்தூரிலுள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்ற, அய்யலு கணேசன் தனது மனைவி ஸ்ரீஜாவை கடுமையாக தாக்கியுள்ளார்.தனது மகள் அடிவாங்குவதை பார்த்து பதறிய ஓமணா தடுக்க முற்பட்டபோது ஓமனாவை தாக்கியதோடு,தடுக்க வந்த தனது மகளையும் தாக்கினார்..இதனிடையே ஸ்ரீஜாவின் முகத்தில் இருந்து ரத்தம் நிற்காமல் வழிந்ததால், அவசர ஊர்தி வரவழைப்பட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மூவரும் அனுமதிக்கப்பட்டனர்.அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீஜாவிற்கு முகத்தில் பட்ட காயத்திற்கு மருத்துவர்கள் ஸ்கேன் எடுக்குமாறு கூறியுள்ளனர்.இதனையடுத்து ஸ்ரீஜா பெண்கள் வார்டிலிருந்து ஸ்கேன் எடுக்க செல்லும் வழியில், அய்யலு கணேசன் தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் தறது மனைவியின் கழுத்தை அறுக்க முற்பட்டுள்ளார்.அப்போது ஸ்ரீஜா தனது இரு கைகளையும் கழுத்து பகுதியில் வைத்து தடுக்க முயற்சித்துள்ளார்.அதில். அவருக்கு வலதுக்கை பகுதியில் பலத்த காயம் ஏற்பபட்டது. அப்போது அங்கு இருந்த பொது மக்கள் மற்றும் காவல் துறையினர் அய்யலு கணேசனை பிடித்து வைத்துள்ளனர். ஸ்ரீஜாவின் கையில் அதிக இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் 9 தையல் போடப்பட்டுள்ளது. ஸ்ரீஜா கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து பேரூர் காவல் துறையினர் அய்யலு கணேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்ரீஜா திருமானத்திற்கு முன்பே சினிமாவில் நடித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளாக சினிமா படத்தில் நடிக்காமல் இருந்துள்ளார். போலீசார் அய்யலு கணேசிடம் நடத்திய விசாரணையில் சினிமா படத்தில் நடிக்க , ஸ்ரீஜா அனுமதி கேட்ட போது, அதை மறுத்தால் பிரச்சனை ஏற்பட்டதாக அவரது கணவர் தெரிவித்துள்ளார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.