ETV Bharat / city

தேவாலயத்தில் சிலை சேதம்: காவல் துறையினர் தீவிர விசாரணை

கோயம்புத்தூர் ராமநாதபுரம் பகுதியில் அமைந்திருக்கும் டிரினிட்டி தேவாலயத்தின் வாயிலில் உள்ள செபஸ்தியர் சிலையை அடையாளம் தெரியாத நபர்கள் சேதப்படுத்தியதையடுத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

police investigation on people who damaged idol at church
தேவாலயத்தில் சிலை சேதம்
author img

By

Published : Jan 24, 2022, 6:10 PM IST

Updated : Jan 24, 2022, 7:54 PM IST

கோயம்புத்தூர்: ராமநாதபுரம் சிக்னல் அருகே டிரினிட்டி தேவாலயம் மற்றும் பள்ளி அமைந்துள்ளது. இந்த தேவாலயத்தின் வாயிலில் புனித செபஸ்தியர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

நேற்று (ஜனவரி 23) இரவு, இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் செபஸ்தியர் சிலையை சேதப்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதனையடுத்து தேவாலயத்தின் காவலாளி ஜான்சன் என்பவர் இது தொடர்பாக ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த ராமநாதபுரம் காவல் துறையினர் அருகில் அங்கு இருக்கும் சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு கோயம்புத்தூரில் வெள்ளலூர் பகுதியில் பெரியார் சிலை அவமதிப்பு சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Viral Video: காவல் ஆய்வாளரின் சட்டையைப் பிடித்த ராணுவ வீரர்

Last Updated : Jan 24, 2022, 7:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.