பொள்ளாச்சியை அடுத்த கோமங்கலம் காவல் நிலையத்திற்கு உள்பட்ட நல்லாம்பள்ளி, சீலக்காம்பட்டி, மலையாண்டி பட்டணம் போன்ற பகுதிகளில் வசிக்கும் மாற்றுத்திறனாள் கரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், “தாங்கள் மிகவும் சிரமப்பட்டு வாழ்க்கை நடத்திவருவதாகவும் கரோனா தொற்று காரணமாக வெளியில் எங்கும் செல்ல முடியாத குழ்நிலையில் வேலைவாய்ப்பின்றி இருக்கும் தங்களுக்கு நிவாரணமாக அரசு ஐந்து ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தில் தங்களுக்கும் நான்கு மணி நேரம் வேலை வழங்க வேண்டும் என்றும் இரண்டு தினங்களுக்கு முன் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பாதுகாப்பு பணிக்கு வந்து மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கை நடத்தும் முறையை அறிந்த கோமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் சிவகுமார், காவல் உதவி ஆய்வாளர் மணிமாறன், காவலர்கள் முஸ்தபா மகாலிங்கம் ஒன்றிணைந்து 50 மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், சக்கரை, ரவை, மாவு போன்ற அத்தியாவசியப் பொருள்களை வழங்கினர்.
தங்களுக்கு நிவாரணம் வழங்கிய கோமங்கலம் காவல்துறையினருக்கு மாற்றுத்திறனாளிகள் நன்றி தெரிவித்தனர்.
இதையும் படிங்க... நிவாரண உதவி வழங்கக் கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்!