கோயம்புத்தூர் பாப்பநாயக்கன் பாளையத்தில் கடந்த 19ஆம் தேதி மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் சாலையில் சுற்றித் திரிவதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற காவல் துறையினர், அந்த நபரை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர் காவலர்களையும், வாகனத்தையும் கடுமையாக தாக்கினார். இதில் சூர்யகுமார் என்ற காவலர் காயமடைந்தார்.
பின்னர் மனநலம் பாதிக்கப்பட்ட அந்நபரை பிடித்த காவல் துறையினர், அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சையளித்தனர்.
அவர் குறித்து விசாரித்தபோது கடந்த எட்டு ஆண்டுக்களாக மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித் திரிவதாகவும், அதே பகுதியில் அவரது குடும்பத்தினர் இருப்பதும் தெரியவந்தது. வீட்டில் இருந்து அடிக்கடி வெளியில் வந்து இது போன்று ரகளையில் ஈடுபடுவதும் தெரியவந்தது.
இதனையடுத்து மனநலம் பாதிக்கப்பட்டவரை அவரது குடும்பத்தினரிடம் காவல் துறையினர் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: குடிபோதையில் ரகளை: தட்டிக்கேட்ட காவலருக்கு கத்திகுத்து