கோயம்புத்தூர் மாவட்ட பாஜகவினர் சிலர், இன்று (நவ.03) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர். அங்கு வந்த அவர்கள் 1978ஆம் ஆண்டு அரசாணையில், அரசு அலுவலங்களில் பிரதமரின் புகைப்படத்தை வைக்கலாம் என உள்ளது. அதன்படி, பிரதமர் மோடியின் புகைப்படத்தை அரசு அலுவலகங்களில் வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து மனு அளிக்க மாவட்ட ஆட்சியரை சந்திக்க முற்பட்டனர்.
ஆனால் ஆட்சியர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றதால், அவரை காண பாஜகவினருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள், ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கு வந்த காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி, அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்