ETV Bharat / city

படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாகக்கூறி கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த நபர்! - coimbatore

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தைப் படமாக எடுப்பதாகக்கூறி, அதில் நடிக்க வாய்ப்பு கேட்டு வந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி பாலியல் மாணவியை வன்கொடுமை செய்த நபர்

author img

By

Published : Sep 14, 2022, 9:58 PM IST

கோயம்புத்தூர்: சென்னயைச்சேர்ந்த இளம்மாணவி ஒருவர் சினிமா துறையில் மிகுந்த ஆர்வம் உடையவராக இருந்தார். கடந்த 2019ஆம் ஆண்டு கோவை நவகரையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த பொழுது, ’டிஎன் 41’ என்ற ஃபேஸ்புக் மூலம் பார்த்திபன் எனும் நபர் வெளியிட்ட நேர்காணல் விளம்பரத்தைப் பார்த்துள்ளார்.

அதன் பின் 19.12.2019அன்று பொள்ளாச்சி ராமகிருஷ்ணன் மேன்சனிற்கு வந்து பார்த்திபனுடன் அறிமுகம் ஆகி உள்ளார். பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை மையமாக வைத்து திரைப்படம் எடுப்பதற்கு முக்கிய கதாபாத்திரமாக நடிப்பதற்கு, மாணவியை தேர்வு செய்ததாகக்கூறி மூன்று நாட்கள் மாணவியிடம் பேசி வந்துள்ளார்.

பின்னர் மாணவிக்கு பார்த்திபன் மயக்க மருந்து கொடுத்து உடலுறவு வைத்துக்கொண்டதாகவும், மயக்கம் தெளிந்த பின்பு மாணவி பிரச்னை செய்தபொழுது பார்த்திபன் 18 வயது முடிந்தவுடன் திருமணம் செய்து கொள்வதாககூறியும் பலமுறை உடலுறவு வைத்துக்கொண்டுள்ளார் எனக்கூறப்படுகிறது.

அதன் பின் கடந்த 2020ஆம் ஆண்டு இணையதளம் வாயிலாகப் பதிவு திருமணம் செய்து கொண்டு கோவைப்புதூர் அறிவொளி நகரில் உள்ள அப்பார்ட்மெண்டில் 15 மாதங்கள் பார்த்திபன் ஆசை வார்த்தைகளைக்கூறி ஒன்றாக வாழ்ந்துள்ளார். ஒரு கட்டத்தில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த மாணவி, தன்னை ஏமாற்றிய பார்த்திபன் மீது நடவடிக்கை எடுக்கும்படி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

கல்லூரி மாணவி கொடுத்தப்புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தலைமறைவான பார்த்திபனை பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் தனிப்படை அமைத்துத்தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: காதலுக்கு மறுப்புத்தெரிவித்த தம்பியை காதலனுடன் சேர்த்துக்கொலை செய்த சகோதரி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.