ETV Bharat / city

வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் மலையேற்றத்துக்கு இன்று முதல் அனுமதி.! - தென்கயிலை என்று அழைக்கப்படும் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில்

கோவை: தென்கயிலை என்று அழைக்கப்படும் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் மலையேற்றத்துக்கு இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் மலையேற்றத்துக்கு இன்று முதல் அனுமதி

author img

By

Published : Feb 11, 2020, 7:34 PM IST

கோவை மாவட்டத்தில் தென்கயிலை என்று அழைக்கப்படும் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இந்த கோயிலிலிருந்து 6 மலைகளைக் கடந்து ஏழாவது மலையில் உள்ள சுயம்பு வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்க பக்தர்கள் ஆண்டுதோறும் ஆன்மீக பயணம் மேற்கொள்வது வழக்கம்.

கடல்மட்டத்திலிருந்து 6 ஆயிரம் அடி உயரத்தில், கிரிமலையில் வெள்ளியங்கிரி ஆண்டவர் பஞ்சலிங்கேஸ்வரராக எழுந்தருளியுள்ளார், சிவராத்திரி மற்றும் சித்ரா பவுர்ணமியன்று இங்கு சாமி தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக மலையேற்றத்திற்கு வருகின்றனர்.

வெள்ளை விநாயகர் மலை, பாம்பாட்டி மலை, கைத்தட்டி மலை, ஒட்டர் சமாதி மலை, பீமன் களி உருண்டை, ஆண்டி சுனை, ஆகிய ஆறு மலைகளைக் கடந்து ஏழாவது மலையான கிரி மலையின் உச்சியில் குகையில் சுயம்பு லிங்கமாக வெள்ளியங்கிரி ஆண்டவர் எழுந்தருளியுள்ளார்.

ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம்வரை நான்கு மாதங்களுக்கு மட்டுமே பக்தர்கள் செல்ல வனத்துறையினர் அனுமதித்து வரும் சூழலில் இந்த ஆண்டுக்கான மலையேற்றத்திற்கு வனத்துறையினர் இன்று முதல் அனுமதி வழங்கியுள்ளனர். காலை 5.30 மணியளவில் பக்தர்கள் தங்களுடைய மலையேற்றத்தை தொடங்கியுள்ளனர். கிரி மலையில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்க இன்று நூற்றுக்கணக்கான பக்தர்கள் மலையேறி சென்றுள்ளனர்.

தென்கயிலை என்று அழைக்கப்படும் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில்

இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், ஏழாவது மலையில் உள்ள மூலவரை தரிசிக்க பல்வேறு இடங்களிலிலிருந்து பக்தர்கள் வருவதாகவும் ஆறு மலைகளை கடந்து ஏழாவது மலையில் உள்ள மூலவரை தரிசிக்கும்போது மனம் நிம்மதியடைவதாகவும், பல்வேறு சிரமங்களுக்கிடையே மலையேறினாலும் சாமி தரிசனம் தங்களுக்கு ஒரு நல்ல அனுபவத்தை தருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் மலையடிவாரத்தில் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளளது. சிவராத்திரி மற்றும் சித்ரா பௌர்ணமி நாட்களில் பல லட்சம் பக்தர்கள் வரக்கூடிய சூழலில் அடிப்படை வசதிகளை இன்னும் மேம்படுத்தவேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:

வனப்பகுதியில் மலையேற்றம்: யானை தாக்கி பெண் உயிரிழப்பு...!

Intro:தென்கயிலை என்று அழைக்கப்படும் பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவில் மலை ஏற்றத்துக்கு இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

Body:தென்கயிலை என்று அழைக்கப்படும் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது இந்த கோவிலில் இருந்து 6 மலைகளைக் கடந்து ஏழாவது மலையில் உள்ள சுயம்பு வெள்ளிங்கிரி ஆண்டவர் தரிசிக்க பக்தர்கள் ஆண்டுதோறும் ஆன்மீக பயணம் மேற்கொள்வது வழக்கம் கடல்மட்டத்தில் இருந்து 6000 அடி உயரத்தில் கிரிமலையில் வெள்ளிங்கிரி ஆண்டவர் பஞ்சலிங்கேஸ்வரராக எழுந்தருளியுள்ளார் சிவன்ராத்திரி மற்றும் சித்ரா பவுர்ணமியன்று இங்கு சாமி தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம், தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக மலையேற்றத்திற்கு வருகின்றனர் வெள்ளைவிநாயகர் மலை, பாம்பாட்டி மலை, கை தட்டி மலை, ஒட்டர் சமாதி மலை, பீமன் களி உருண்டை, ஆண்டி சுனை, ஆகிய ஆறு மலைகளைக் கடந்து ஏழாவது மலையான கிரி மலையின் உச்சியில் குகையில் சுயம்பு லிங்கமாக வெள்ளிங்கிரி ஆண்டவர் எழுந்தருளியுள்ளார். ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் மே மாதம் வரை நான்கு மாதங்களுக்கு மட்டுமே பக்தர்கள் செல்ல வனத்துறையினர் அனுமதி அனுமதித்து வரும் சூழலில் இந்த ஆண்டுக்கான மலை ஏற்றத்திற்கு வனத்துறையினர் இன்று முதல் அனுமதி வழங்கியுள்ளனர். காலை ஐந்து முப்பது மணி அளவில் பக்தர்கள் தங்களுடைய மழை ஏற்றத்தை துவங்கியுள்ளனர் கிரி மலையில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்க இன்று நூற்றுக்கணக்கான பக்தர்கள் மலையேறி சென்றுள்ளனர் இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில் ஏழாவது மலையில் உள்ள மூலவரை தரிசிக்க பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வருவதாகவும் ஆறும் மலைகளை கடந்து ஏழாவது மலையில் உள்ள மூலவரை தரிசிக்கும் போது மன நிம்மதி அடைவதாகவும் பல்வேறு சிரமங்களுக்கு இடையே மலை ஏறினாலும் சாமி தரிசனம் தங்களுக்கு ஒரு நல்ல அனுபவத்தை தருவதாக தெரிவித்தனர் மேலும் மலை அடிவாரத்தில் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளதாகவும் சிவன்ராத்திரி மற்றும் சித்ரா பவுர்ணமி நாட்களில் பல லட்சம் பக்தர்கள் வரக்கூடிய சூழலில் அடிப்படை வசதிகளை இன்னும் மேம்படுத்த வேண்டும் எனவும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.