கோயம்புத்தூர்: வெளிநாடுகளில் குறிப்பாக, ஜப்பான் சீனா உள்ளிட்ட நாடுகள் புதிய தொழில்நுட்பம் மூலம் நவீன காங்கிரீட் வீடுகளை கட்டட வல்லூனர்கள் உருவாக்கி வருகின்றனர். தற்போது பொள்ளாச்சி அருகே உள்ள ராசக்கா பாளையம் , கோட்டாம்பட்டி ஆகிய இடங்களில் புதிதாக தொழில் நுட்ப முறையில் வீடுகள் கட்டப்படுகின்றன.
சாதாரணமாக புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு 6 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை கால அவகாசம் பிடிக்கும். ஆனால் ப்ரீகாஸ்ட் கான்கிரீட் எனப்படும் புதிய தொழில் நுட்பத்தின் மூலம், 48 மணி நேரத்தில் ஒரு வீட்டை கட்டி முடித்து விடலாம்.
கேட்பதற்கு ஆச்சரியமாகவும், ஏதோ வேடிக்கைக்கு சொல்வது போல இருந்தாலும் அது சாத்தியம் தான் என்கிறார் கோவை `வேலன் கான்காஸ்ட்' நிறுவன உரிமையாளர் கே.எம்.வேலுமணி.
இந்த புதிய தொழில்நுட்பம் குறித்து வேலுமணி கூறியதாவது, "கடந்த 2010 ஆம் ஆண்டு ப்ரீக்காஸ்ட் முறையில், வீட்டு உபயோக பொருட்களான கழிவுநீர் தொட்டி, தண்ணீர் தொட்டி, சுற்றுச் சுவர்கள், 10க்கு 20 அறைகள் இவைகளை ரெடிமேடாக உற்பத்தி செய்வதில் தொடங்கினோம். அதனுடைய அடுத்த கட்ட வளர்ச்சியாக ப்ரீகாஸ்ட் காங்கிரீட் முறையில், ரெடிமேடாக வீடுகள் கட்டும் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.
பொள்ளாச்சியில் என்னுடைய பொறியாளர் நண்பர் மூலம், ஒரு பள்ளிக்கூடம், மருத்துவமனை கட்டவேண்டும் என கேட்டனர். கட்டடம் கட்டும் இடத்தில் எதிர்காலத்தில், புதிய திட்டம் தொடங்கும் போது ஏற்கனவே இருக்கும் கட்டடத்தை எளிதாக அகற்றும் படி இருக்க வேண்டும் என கேட்டார்கள். முதலில், ஸ்டீலில் தான் கட்டுவது என முடிவு செய்யப்பட்டது. ஸ்டீல் வேண்டாம் புதியதாக ஏதாவது சொல்லுங்கள் என கேட்ட போது எங்களுடைய ப்ரீகாஸ்ட் கான்கிரீட் பொருட்களைக் காட்டினோம். அவர்களுக்கு திருப்பதி ஏற்பட்டு இப்போது, ப்ரீகாஸ்ட் கான்கிரீட் முறையில் கட்டடம் கட்டி வருகிறோம். இதே முறையில், காரைக்கால் என்ஐடிக்கு, 320 மாணவர்கள் தங்கும் படியான, 20க்கு 10 அடி அறைகளை, 60 நாட்களில் கட்டிமுடித்துக் கொடுத்தோம். வழக்கமான கட்டட செலவுகளைப் போல தான் ப்ரீகாஸ்ட் கான்கிரீட் கட்டங்களுக்கான செலவும் ஆகும். ப்ளோட்டிங் ஆன் எர்த் என்ற எண்ணத்தின் அடிப்படையில் தான் இந்த புதிய தொழில் நுட்பத்தை முயற்சி செய்கிறோம். ஒரு கட்டடம் கட்டும் போது ஏற்படும் கால, நேர, பொருளாதார விரையத்தை இந்த புதிய தொழில் நுட்பத்தின் மூலம் குறைக்க முடியும். அதே நேரத்தில் தரமான வீடுகளையும் தரமுடியும். ரெடிமேட் இந்த வீடுகள் தரையுடன் சரியாக பொருந்தி விடுவதால் எல்லா இயற்கை சீற்றத்தையும் தாங்கும். ப்ரீகாஸ்ட் கான்கிரீட் கட்டடங்களின் பெரிய வசதி அந்த கட்டடங்களை கலைத்து விட்டு எங்கு வேண்டுமானாலும். புதிய கட்டடத்தை கட்ட முடியும். வீட்டை இடிக்க வேண்டிது இல்லை. ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்வது எளிது என்றார்.
இதையும் படிங்க: மருத்துவப்படிப்பில் சேர்ந்துள்ள 21 தருமபுரி அரசுப்பள்ளி மாணவர்ளுக்கு நிதியுதவி - அமைச்சர் கே.பி அன்பழகன் !