கோயம்புத்தூர்: கரோனா ஊரடங்கு காரணமாக ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, மக்களிடம் மாவட்ட ஆட்சியர் நேரடியாக மனுக்களை வாங்கும் நடைமுறை நிறுத்தப்பட்டது.
அன்றிலிருந்து மனு அளிக்க வரும் பொதுமக்கள் அலுவலகத்திலுற்கு வெளியிலுள்ள மனுயளிக்கும் பெட்டியில் தான் மனுக்களைப் போட்டு வந்தனர்.
இந்நிலையில் இன்று (அக்.04) முதல் மீண்டும் முந்தைய நடைமுறை தொடங்கியுள்ளது. இதனையொட்டி இன்று நாதஸ்வர தவில் இசைக்கலைஞர்கள், பொதுமக்கள், விவசாய சங்கங்கள் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரனை நேரில் சந்தித்து மனுக்களை அளித்தனர்.
ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த மக்கள்
நீண்ட நாள்களுக்குப் பிறகு ஆட்சியரை சந்தித்து மனு அளிப்பது நம்பிக்கையளிப்பதாக அவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து இனி, வரும் நாள்களில் வாரம்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![பொதுமக்களிடம் மனு பெற்ற ஆட்சியர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-cbe-01-petition-start-photo-script-tn10027_04102021120301_0410f_1633329181_632.jpg)
மீண்டும் நேரடி குறைதீர் முகாம் தொடங்கியுள்ளதால், ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.
இதையும் படிங்க: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக மாடியில் ஏறி இளைஞர் தற்கொலை முயற்சி!