ETV Bharat / city

யானைத் தந்தம், மான் கொம்புகள் தீ வைத்து எரிப்பு - forest department office in coimbatore

கோயம்புத்தூர் வனக்கோட்டத்தில் கைப்பற்றப்பட்ட யானைத் தந்தம், பல், தாடை, மான் கொம்பு, தோல் உள்ளிட்ட 274 வகையான பொருள்கள் கோயம்புத்தூர் வனத்துறை அலுவலகத்தில் தீ வைத்து எரிக்கப்பட்டது.

யானைத் தந்தம், மான் கொம்புகள் தீ வைத்து எரிப்பு

author img

By

Published : Jan 22, 2022, 8:18 AM IST

கோயம்புத்தூர்: தமிழ்நாடு முழுவதும் வனப்பகுதியில், இயற்கை மரணம் மற்றும் நோயால் இறந்த வனவிலங்குகளிடம் இருந்து சேகரிக்கப்பட்ட பொருள்களை தீ வைத்து அழிக்க தமிழ்நாடு முதன்மை தலைமை வன பாதுகாவலர் உத்தரவிட்டுள்ளார்.

இதன் ஒரு பகுதியாக கோயம்புத்தூர் வனக்கோட்டத்திற்குட்பட்ட வனச்சரகங்களான பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை, மதுக்கரை மற்றும் போளுவாம்பட்டி ஆகிய வனசரகங்களில் கைப்பற்றபட்ட யானையின் கோரைப்பற்கள், யானையின் தாடை, மான் கொம்புகள், சிறுத்தை நகங்கள் ,பற்கள் மற்றும் எலும்புகள் போன்றவற்றை நேற்று (ஜனவரி 21) கோயம்புத்தூர் மாவட்ட வன அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

parts of died wild animals destroyed at coimbatore

மாவட்ட அலுவலகத்தில் தன்னார்வலர்கள் முன்னிலையில் தீ வைத்து எரிக்கப்பட்டன. 33 யானைத் தந்தங்கள், 8 யானை தாடை பகுதிகள், 287 மான் கொம்புகள், ஒரு மான் தோல், சிறுத்தையின் 13 நகரங்கள், இரண்டு பற்கள் மற்றும் 10 எலும்புகள் என மொத்தம் 274 வகையான பறிமுதல் செய்யப்பட்ட பாகங்கள் தன்னார்வலர்கள் முன்னிலையில் தீ வைத்து எரிக்கப்பட்டது.

மாவட்ட வன அலுவலர் அசோக்குமார், உதவி வன பாதுகாவலர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் இந்த பணி நடைபெற்றது.

யானைத் தந்தம், மான் கொம்புகள் தீ வைத்து எரிப்பு

இதையும் படிங்க: இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட 108 படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.