ETV Bharat / city

கோவை; மகளின் மரணத்துக்கு நீதிகோரி ஆட்சியரிடம் பெற்றோர் புகார் - நீட் பயிற்சி மையத்தில் மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரம்

கோவில்பாளையத்தில் தனியார் நீட் பயிற்சி மையத்தின் விடுதியில் ஸ்வேதா(18) என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் தலையிட்டு காவல்துறை தீவிர விசாரணை மேற்கொள்ள உத்தரவிடுமாறு மாணவியின் பெற்றோர் இன்று (ஏப்.26) மாவட்ட ஆட்சியர்களிடம் மனு அளித்துள்ளனர்.

பெற்றோர் மனு
பெற்றோர் மனு
author img

By

Published : Apr 26, 2022, 7:05 PM IST

கோவை: கோவில்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நீட் பயிற்சி மையத்தின் விடுதியில் ஏப்.1ஆம் தேதி ஸ்வேதா(18) என்ற மாணவி தற்கொலையால் உயிரிழந்தார். இந்த நிலையில், காதல் விவகாரத்தால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கோவில்பாளையம் காவல் துறையினர் கூறினர்.

இதற்கிடையில், மாணவியின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும், மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தனியார் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் உயிரிழந்த மாணவியின் பெற்றோர், இன்று (ஏப்.26) கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

உரிய விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியரிடம் மனு
மாணவி உயிரிழப்பில் சந்தேகம்: அந்த மனுவில், 'எங்கள் மகளின் உயிரிழப்பில் பல்வேறு சந்தேகங்கள் இருக்கின்றன. தற்கொலை செய்து கொண்டதற்கான புகைப்பட ஆதாரம் இல்லை, தாமதமாகத் தகவல் தெரிவித்துள்ளனர்.
புலனாய்வு தொடங்கும் முன்பே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி அறை சுத்தம் செய்யப்பட்டுள்ளது. அகாடமி நிர்வாகத்திடம் காவல்துறையினர் விசாரணை நடத்தவில்லை. இதற்கு முன்பே ஒரு பெண் சந்தேகத்திற்கு இடம் தரும் வகையில் உயிரிழந்துள்ளார்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்: இது குறித்துப் பேசிய மாணவியின் பெற்றோர், 'மாணவியின் உயிரிழப்பு குறித்து காவல்துறையினர், முறையான விசாரணை மேற்கொள்ளவில்லை. இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வழிவகை செய்ய வேண்டும்' எனத் தெரிவித்தனர்.
பின்னர் பேசிய அர்த்தனாரிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் குலோத்துங்கன், 'மாணவியின் உயிரிழப்பு குறித்து ஏற்கனவே, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால், மனு மீது எவ்வித முன்னேற்றமும் இல்லை. இதற்கு முன்பே அந்த அகாடமியில் இதுபோன்ற நிகழ்வுகள் நிகழ்ந்து உள்ளதாக மாணவி தெரிவித்துள்ளதால் மாணவியின் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளது' எனக் கூறினார்.

இதையும் படிங்க: நீட் பயிற்சி மையத்தில் மாணவி தற்கொலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.