ETV Bharat / city

டென்ட்டில் தங்கி, அரைக்கால் ட்ரவுசர் அணிந்து திருடி வந்த கும்பல் - சிக்க வைத்த சிசிடிவி காட்சி - Towser thieves CCTV

கோவை : கட்டுக்கோப்பான உடல், அரைக்கால் ட்ரவுசர், இடுப்பில் கத்தி உள்ளிட்ட அடையாளங்களுடன் முகத்தைத் துணியால் மூடியபடி நகரின் பல்வேறு பகுதிகளில், இரவு நேரங்களில் ஒரு கும்பல் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நிலையில், அக்கும்பலைச் சேர்ந்த ஒரு திருடனை காவல் துறையினர் கையும் களவுமாகப் பிடித்துள்ளனர்.

டென்ட் போட்டு தாங்கியுள்ள டவுசர் திருடர்கள்! பென்ட் கழட்டப்படுவார்களா?

author img

By

Published : Aug 8, 2020, 2:23 PM IST

கோவை, இருகூர், தீபம் நகர் பகுதியில் அரைக்கால் ட்ரவுசருடன் ஒரு கும்பல் இரவு நேரங்களில் சுற்றித் திரிவது, கடந்த ஜூலை மாதம் 23ஆம் தேதி சிசிடிவி காட்சிகள் மூலம் தெரிய வந்தது. இது குறித்து முன்னதாக சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் பொது மக்கள் புகார் அளித்திருந்தனர்.

இந்நிலையில் அடுத்த சில தினங்களிலேயே அதே கும்பல் பீளமேடு பகுதியில் மீண்டும் அரைக்கால் ட்ரவுசருடன் கூட்டமாக நடந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் பதிவாகி இருந்தன. ஆனால் திருட்டு தொடர்பாக புகார் எதுவும் வராத நிலையில், இந்த அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து விசாரணை செய்ய குற்றப் பிரிவு காவல் துறையினர் தனிப்படை அமைத்து இரவு நேரங்களில் பல்வேறு பகுதிகளில் தொடர் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், சென்ற ஆகஸ்ட் 5ஆம் தேதி சிங்காநல்லூர் பகுதியில் ஒரு வீட்டில் ட்ரவுசர் திருடர்கள், சுவர் ஏறி குதித்து ஒரு வீட்டின் உள்ளே செல்லும் சிசிடிவி காட்சிகள் காவல் துறையினருக்கு கிடைத்துள்ளது.

கொள்ளையடிப்பதற்கு உலா வரும் ட்ரவுசர் திருடர்கள் - சிசிடிவி காட்சி

அரைக்கால் ட்ரவுசர் மட்டும் அணிந்து முகத்தைத் துணியால் மூடியபடி வரும் அக்கும்பல் சிசிடிவி காட்சியில் தெளிவாகப் பதிவாகியிருந்த நிலையில், அவர்களுள் ஒரு நபர் மட்டும் முகத்தை மறைக்காமல் திருட வந்த நிலையில் அதுவும் சிசிடிவி காட்சிகளில் பதிவாகி இருந்தது.

சிசிடிவி காட்சியில் சிக்கிய நபரின் தோற்றத்தைக் கொண்டு காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், இன்று அதிகாலை 4 மணியளவில் சிங்காநல்லூர் காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது அப்பகுதி ரயில் நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும்படி இருந்த வீரமணி என்பவரைப் பிடித்து விசாரித்தனர்.

டவுசர் திருடர்களை மொத்தமாக பிடிக்க போலீசார் பிடித்துள்ள பொறி (வீரமணி)
காவல் துறையினரிடம் பிடிபட்ட வீரமணி

அப்போது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருந்த நபர்தான் அவர், என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் உதகை பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், கோவையில் பல்வேறு இடங்களில் அவர்கள் டென்ட் அமைத்து தங்கி இருப்பதும், இரவு நேரங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருவதும் தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து வீரமணியுடன் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற நபர்கள் குறித்து தனிப்படை காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: 'இத்துணுண்டு பார்சல்ல இம்புட்டு தங்கமா? ஸ்வப்னாவுக்கும் தொடர்பா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.