ETV Bharat / city

பள்ளி மாணவன் மீது ஆசிரியர் தாக்குதல் - ஓபிஎஸ் கண்டனம் - கோயமுத்தூர் மாவட்ட செய்திகள்

தனியார்ப் பள்ளியில் மாணவர் இறுக்கமான சட்டை அணிந்ததற்காக ஆசிரியர் தாக்கிய சம்பவத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

பன்னீர்செல்வம் கண்டனம்
பன்னீர்செல்வம் கண்டனம்
author img

By

Published : Dec 12, 2021, 10:52 AM IST

கோவை: கணபதி பகுதியிலுள்ள சி.எம்.எஸ் தனியார்ப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்துவருபர் மிதுன். இந்த மாணவர் கால்பந்து வீரராக, கோவை மாவட்ட அணிக்குத் தேர்வாகியுள்ள சூழ்நிலையில், நீட் பயிற்சியையும் மேற்கொண்டு வருகிறார்.

இறுக்கமான சட்டை போட்டதற்காக அறை

பள்ளிக்கூடங்கள் திறந்து ஒரு மாதமே ஆகியுள்ள நிலையில், மாணவருக்குத் தைக்கப்பட்ட சட்டை இறுக்கமின்றி தளர்வாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அவரது தாயார் சற்றே இறுக்கமாக இருக்கும் வகையில் தைத்த சட்டையுடன் மாணவரை அனுப்பியுள்ளார். இந்நிலையில், பள்ளிக்குச் சென்ற போது, அங்கு வகுப்பறைக்கு வந்த இயற்பியல் ஆசிரியர் சிவரஞ்சித் என்பவர் மாணவரைச் சட்டை ஏன் இவ்வளவு இறுக்கமாக இருக்கிறது எனக் கேட்டு அறைந்துள்ளார்.

சரவணம்பட்டி காவல்துறை விசாரணை

மேலும், அந்த ஆசிரியர் சரமாரியாகத் தாக்கியதில் மாணவருக்குக் காது, கழுத்து, முதுகு ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து மாணவர் அளித்த தகவலின் பேரில் பள்ளிக்குச் சென்ற மாணவரின் தந்தை அவரை கோவை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இது தொடர்பாக மாணவர் தந்தை கலாதரன் அளித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கண்டனம்

இதைப்பற்றி அறிந்த அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், இச்சம்பவத்திற்குக் கண்டம் தெரிவித்துள்ளார். மேலும், இது குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "அறச் செயல்களைக் கற்றுத் தரும் ஆசிரியர்களே ஒழுக்கத்தை மீறிச் செயல்படுவது வருத்தமளிக்கிறது எனவும் இதற்கு அதிமுக கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதாகவும், இனி வரும் நாட்களில் இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க: ஹெலிகாப்டர் விபத்து: வீரர்களுக்கு நினைவுச் சதுக்கம் அமைக்க பொதுமக்கள் கடிதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.