ETV Bharat / city

பட்டாசு வெடிக்க தடை இல்லை: காவல்துறை விளக்கம் - பட்டாசு வெடிக்க தடையில்லை

தீபாவளியில் பட்டாசு வெடிக்க முழுமையாக தடை விதிக்க வில்லை என்று காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

Firecrackers
Firecrackers
author img

By

Published : Nov 2, 2021, 5:21 PM IST

தீபாவளி பண்டிகை நவ.4ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. ஒரு சில மாநிலங்களில் பட்டாசுகள் வெடிக்க, விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசு, உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தல்படி பேரியம் கலந்த பட்டாசுகளைத் தயாரிப்பது, விற்பது, வெடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மக்கள், பட்டாசு வெடிக்கலாமா, கூடாதா என்னும் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.

இதுகுறித்து காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், தீபாவளியின் போது பட்டாசுகள் வெடிப்பது முழுமையாக தடை செய்யப்படவில்லை. லித்தியம், மெர்குரி, பேரியம் உள்ளிட்ட ரசாயனம் கொண்டு தயாரிக்கப்படும் பட்டாசுகள் மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளன. பசுமை பட்டாசுகளுக்கு தடை கிடையாது. பிஇஎஸ்ஓ வால் அங்கீகரிக்கப்பட்ட பட்டாசு கடைகளில் விற்பனை செய்யப்படும் பட்டாசுகளை வாங்கி வெடிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அமைதியான பகுதிகளில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் - தமிழ்நாடு அரசு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.