New restrictions: கோயம்புத்தூர் மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
இந்நிலையில் நேற்று (ஜனவரி 14) கோவை மாவட்டத்தில் 1500-க்கும் மேற்பட்ட பாதிப்பு எண்ணிக்கை பதிவானதால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
![கோவையில் கரோனாவால் புதிய கட்டுப்பாடுகள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-cbe-01-covid-issue-park-close-visu-tn10027_15012022122025_1501f_1642229425_132.jpg)
அந்த வகையில் மாநகராட்சியில் உள்ள பூங்காக்கள், நீச்சல் குளங்கள் அனைத்தும் மறு அறிவிப்பு வரும்வரை பொதுமக்களுக்குத் தடைவிதிக்கப்படுவதாக மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
மேலும் ரேஸ்கோர்ஸ் பகுதிகளில் பொதுமக்கள் கூடவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும்வரை காவல் துறையினர் தொடர் ரோந்துப் பணிகளில் ஈடுபடுவர்.
அதே சமயம் கோயம்புத்தூரில் முகக்கவசமின்றி யாரேனும் நடமாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகையால் மாநகராட்சி நிர்வாகத்தின் அறிவிப்பிற்கு மக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: சூரியூர் ஜல்லிக்கட்டு: காளை முட்டியதில் ஒருவர் உயிரிழப்பு