கோயம்புத்தூர்: கூடலூர், காரமடை, கருமத்தம்பட்டி, மதுக்கரை ஆகிய நான்கு பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த நான்கு நகராட்சிகளுக்கான வாக்குச் சாவடிகள், வார்டு எண்ணிக்கை மற்றும் வாக்காளர் பட்டியலை கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்டார்.
இந்த நான்கு நகராட்சிகளில் மொத்தம் ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 134 வாக்காளர்களும், 159 வாக்குச் சாவடிகளும், 108 வார்டுகளும் உள்ளன.
அதில் கூடலூரில் 27 வார்டுகளும், 49 வாக்குச் சாவடிகளும், 40,393 வாக்காளர்களும் உள்ளனர்.
காரமடையில் 27 வார்டுகளும், 39 வாக்குச் சாவடிகளும், 30,747 வாக்காளர்களும் உள்ளனர்.
கருமத்தம்பட்டியில் 27 வார்டுகளும், 36 வாக்குச் சாவடிகளும், 30,270 வாக்காளர்களும் உள்ளனர்.
மதுக்கரையில் 27 வார்டுகளும், 35 வாக்குச் சாவடிகள், 28,724 வாக்காளர்களும் உள்ளனர்.
தற்போது மொத்தமாக ஏழு நகராட்சிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஜன.31 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!