ETV Bharat / city

ஆர்எஸ்எஸ் கொள்கையின் சாயலா புதிய கல்வி அறிக்கை?

கோவை: இந்தியாவில் கல்வியை ஆர்எஸ்எஸ் கொள்கைக்கு ஏற்றார்போல் பாஜக அரசு வடிவமைக்கிறது என்று கேரள மாநில முன்னாள் கல்வித்துறை அமைச்சர் பேபி குற்றஞ்சாட்டியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
author img

By

Published : Jul 27, 2019, 8:22 AM IST

கோவை காந்திபுரம் 100அடி சாலையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி(சிபிஎம்) அலுவலகத்தில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், கேரள மாநில முன்னாள் கல்வி அமைச்சர் பேபி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக உள்ள அம்சங்கள் கொண்ட பிரசுங்கள் வெளியிட்டப்பட்டது.

பின்னர் பேசிய பேபி, புதிய கல்விக் கொள்கை குறித்து மக்களிடம் எந்தவொரு கருத்து கேட்பு கூட்டமும் மத்திய அரசு நடத்தவில்லை. புதிய கல்விக் கொள்கை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கல்வியாளர்களுடன் அலோசனை செய்து ஒரு தெளிவான அறிக்கையைக் தயாரித்து, சிபிஎம் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி பிரதமர் மோடியிடம் வழங்கவுள்ளார். இந்தியாவின் கல்வியைக் ஆர்எஸ்எஸ் கொள்கைக்கு ஏற்றார்போல் பாஜக வடிவமைக்கிறது என்றார்.

கேரள மாநில முன்னாள் கல்வி அமைச்சர் பேபி பேட்டி

Intro:tn_cbe_03_cpm_g.ramakirushnan_byte_9020856.mp4Body:tn_cbe_03_cpm_g.ramakirushnan_byte_9020856.mp4Conclusion:புதிய கல்விக் கொள்கை யில் 20க்கும் குறைவான மாணவர்களே இருந்தால் அந்தப் பள்ளியை மூட சொல்லி இருப்பதாக மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

கோவை காந்தி புரம்
100 அடி சாலையில் உள்ள சிபிஎம் கட்சி அலுவலகத்தில் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை குறித்து அக்கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் கேரள மாநில முன்னாள் கல்வி அமைச்சர் பேபி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போது புதிய கல்விகொள்கைக்கு எதிராக பாரதி புத்தகலாயம் தயாரித்துள்ள போஸ்டர்களை முன்னாள் அமைச்சர் பேபி வெளியிட்டார். இந்த போஸ்டர்களில் ஏன் புதிய கல்வி கொள்கை தேவையில்லை என்பது விளக்கப்பட்டு இருந்தது. அப்போது பேசிய அரசியல் தலைமை குழு உறுப்பினர்
ஜி.ராமகிருஷ்ணன்,
தேசிய கல்வி கொள்கை அறிக்கை மீது நாடு முழுவதும் விவாதம் நடைபெற்று கொண்டு இருக்கின்றது எனவும் அதில் பாதகமான அம்சங்களே இருப்பதால் ,
அதில் திருத்தம் செய்வது சரியானது அல்ல எனவும் புதிய கல்விக்கொள்கையினை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றோம் எனவும் தெரிவித்தார். தமிழகத்தில் 5000 இடங்களில் தெருமுனை கூட்டங்கள் நடத்தி ஓரு கோடி பேரிடம் கையெழுத்து பெற்று மத்திய அரசுக்கு அனுப்ப இருக்கின்றோம் என தெரிவித்த அவர்,
புதிய கல்விக்கொள்கையில்
20 க்கும் குறைவான மாணவர்களை கொண்ட அரசு பள்ளிகளை மூட வேண்டும் என்று
சொல்லப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். மேலும் தனியார்
சுயநிதி கல்லூரிகள் கட்டணங்களை தீர்மானித்து கொள்ளலாம் எனவும் சொல்லப்பட்டுள்ளது என கூறிய அவர்,நவீன, தாராளமய கொள்கையினை மத்திய அரசு புதிய கல்வி கொள்கை அறிக்கையில் சொல்லி இருக்கின்றது எனவும் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.

இதனைதொடர்ந்து கேரள மாநில முன்னாள் கல்வி அமைச்சர் பேபி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது
இந்த புதிய கல்வி கொள்கை குறித்து மக்களிடம் எந்தவொரு கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட வில்லை என தெரிவித்தார்.இந்த புதிய கல்வி கொள்கை குறித்து சிபிஎம் கட்சி சார்பில் கல்வியாளர்களுடன் அலோசனை செய்து ஒரு தெளிவான அறிக்கையைக் தயார் செய்துள்ளோம் எனவும்,இந்த அறிக்கையைக் சிபிஎம் கட்சி பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி அவர்கள் பிரதமர் மோடியிடம் வழங்கவுள்ளார் எனவும் தெரிவித்தார்.இந்தியாவில் மொழி வாரியாக சில மாநிலங்கள் பிரிக்கப்பட்டது தெரிந்தும், ஹிந்திக்கு இந்த அரசில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் ,இந்தியாவின் கல்வியைக் ஆர்.எஸ்.எஸ் கொள்ளைக்கு ஏற்றார் போல் வடிவமைக்கின்றார்கள் என்றும் தெரிவித்த அவர் இந்த புதிய கல்வி கொள்கை பண்முக தன்மைக்கு எதிரானது எனவும் குற்றம்சாட்டினார்.
அனைத்து மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கபட வேண்டும் எனவும், ஒரு சில மொழிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்க கூடாது எனவும் கேரள மாநில முன்னாள் கல்வி அமைச்சர் பேபி தெரிவித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.