ETV Bharat / city

தடுப்பூசி போட்டபோது மறந்து விடப்பட்ட ஊசி - வலியால் துடித்த பச்சிளம் குழந்தை! - new born baby

கோயமுத்தூர் : மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி போட்டபோது தொடையில் மறந்து விடப்பட்ட ஊசி. 20 நாட்களாக வலியால் துடித்த பச்சிளங்குழந்தை சிகிச்சை, நடவடிக்கை எடுக்கக் கோரி குழந்தையின் தாய்  தலைமை மருத்துவரிடம் மனு கொடுத்துள்ளார்.

Vaccination issuse
author img

By

Published : Sep 10, 2019, 7:33 AM IST

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் எம்.எஸ் .ஆர்.புரத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன். அப்பகுதியில் செல்போன் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மனைவி மலர்விழி இவர்களுக்குத் திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்தநிலையில், இரண்டாவது முறையாக கர்ப்பமான அவருக்கு பிரசவவலி ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த மாதம் 19 ஆம் தேதி பிரசவத்திற்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து (20.8.19) காலை அறுவை சிகிச்சை மூலம் அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 21 ஆம் தேதி மாலை 6.00 மணிக்கு செவிலியர் குழந்தைக்கு இடது கை மற்றும் இடது தொடையில் தடுப்பூசி போட்டுள்ளார். 31ஆம் தேதி மலர்விழி மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். வீட்டிற்கு சென்ற நாள் முழுவதும் பச்சிளங்குழந்தைஅழுது கொண்டே இருந்தது. குழந்தை அழுவதற்கான காரணம் தெரியாமல் தாய் மலர்விழியும் அவரது கணவரும் தவித்தனர்.

கோயமுத்தூர்  பச்சிளம் குழந்தை  தடுப்பூசி பிரச்சனை  coimbatore  new born baby  Vaccination issuse
பச்சிளம் குழந்தை

அப்போது குழந்தைக்கு ஊசி போட்ட இடது தொடையில் லேசான வீக்கம் காணப்பட்டது . நாளடைவில் வீக்கம் கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகிக்கொண்டே வந்தது. குழந்தையும் தொடர்ந்து இடைவிடாது அழுது கொண்டேஇருந்தது. இந்தநிலையில், இன்று காலை மலர்விழியின் தாய் தேன்மொழி குழந்தையை குளிப்பாட்ட்டியுள்ளார். அப்போது இடது தொடையை தேய்க்கும் போது தேன்மொழியின்கையில் ஏதோ குத்தியது. பின்னர் குத்திய இடத்தில் இருந்து ரத்தம் வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த தேன்மொழி குழந்தையின் இடதுதொடையை தொட்டுப்பார்த்தார். அப்போது ஊசி போட்ட இடத்தில் ஊசியின் கூர் முனை வெளியே தெரிந்தது. உடனே அவர் அழுதுகொண்டே வீட்டில் இருந்தவர்கள் உதவியுடன் தொடையில் சிக்கியிருந்த ஊசியை அகற்றினார். இதனையடுத்து, குழந்தையின் தாய் மலர்விழி, அவரது உறவினர்கள் குழந்தையை எடுத்துக் கொண்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்குச் சென்றனர்.

மறந்து விடப்பட்ட ஊசி

தலைமை மருத்துவ அலுவலர் (பொறுப்பு) இளஞ்செழியனிடம்நடந்த சம்பவம் பற்றி எடுத்துக்கூறி இடது தொடையில் சிக்கிய ஊசியையும் காட்டினார்கள். மேலும் மலர்விழி அவரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில், எனது குழந்தைக்கு உரிய சிகிச்சை கொடுத்து உதவுமாறும் சம்பந்தப்பட்ட செவிலியர், பணி மருத்துவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்திட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிறந்த குழந்தைக்கு தடுப்பு ஊசி போட்ட பின்னர் ஊசியை அப்படியே அலட்சியமாக விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Intro:மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் பிறந்த
குழந்தைக்கு தடுப்பூசி போடும்போது தொடையில்
மறந்து விடப்பட்ட ஊசி.20 நாட்களாக வலியால் துடித்த பச்சிளங்குழந்தை.அரசு மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியம்...
Body:

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் எம்.எஸ்.ஆர்.புரத்தைச்சேர்ந்தவர்
பிரபாகரன். அப்பகுதியில் செல்போன் கடை
வைத்துள்ளார். இவரது மனைவி
மலர்விழி இவர்களுக்குஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்தநிலையில் 2 வது முறையாக
கர்ப்பிணியான அவருக்கு பிரசவ
வலி ஏற்பட்டு பிரசவத்திற்காக
கடந்த மாதம் 19 ஆம் தேதி
மேட்டுப்பாளையம் அரசு மருத்துவ
மனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து (20.8.19) காலை அறுவை சிகிச்சை மூலம் அழகான ஆண் குழந்தை பிறந்தது.தாயும் சேயும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 21 ஆம் தேதி மாலை 6.00 மணிக்கு செவிலியர் குழந்தைக்கு இடது கை
மற்றும் இடது தொடையில் தடுப்பூசி போட்டுள்ளார் .31ஆம் தேதி மலர்விழி மருத்துவமனையில்
இருந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.வீட்டிற்கு சென்ற
நாள் முழுவதும் பச்சிளங்குழந்தை
அழுது கொண்டே இருந்தது. குழந்தை அழுவதற்கான
காரணம் தெரியாமல் தாய் மலர்விழியும் அவரது கணவரும் தவித்தனர்.அப்போது குழந்தைக்கு
ஊசி போட்ட இடது தொடையில்
லேசான வீக்கம் காணப்பட்டது.
நாளடைவில் வீக்கம் கொஞ்சம்
கொஞ்சமாக பெரிதாகிக்கொண்டே வந்தது.
குழந்தையும் தொடர்ந்து இடைவிடாது அழுது கொண்டே
இருந்தது.இந்தநிலையில் இன்று காலை மலர்விழியின்
தாய் தேன்மொழி குழந்தையை குளிப்பாட்ட்டியுள்ளார்.
அப்போது இடது தொடையை தேய்க்கும் போது தேன்மொழியின்
கையில் ஏதோ குத்தியது.பின்னர் குத்திய இடத்தில் இருந்து ரத்தம் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தேன்மொழி குழந்தையின் இடது
தொடையை தொட்டுப்பார்த்தார்.
அப்போது ஊசி போட்ட இடத்தில்
ஊசியின் கூர் முனை வெளியே
தெரிந்தது.உடனே அவர் அழுது
கொண்டே வீட்டில் இருந்தவர்கள்
உதவியுடன் தொடையில் சிக்கியிருந்த ஊசியை அகற்றினார்கள்.இதனையடுத்து
குழந்தையின் தாய் மலர்விழி
மற்றும் உறவினர்கள் குழந்தையை
எடுத்துக்கொண்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவ
மனைக்கு சென்றனர்.தலைமை
மருத்துவ அலுவலர் (பொறுப்பு)இளஞ்செழியனிடம்
நடந்த சம்பவம் பற்றி எடுத்துக்கூறி
இடது தொடையில் சிக்கிய ஊசியையும் காட்டினார்கள்.மேலும்
மலர்விழி அவரிடம் புகார் மனு
ஒன்று கொடுத்தார்.அதில்,
எனது குழந்தைக்கு உரிய சிகிச்சை கொடுத்து உதவுமாறும்
சம்பந்தப்பட்ட செவிலியர் மற்றும்
பணி மருத்துவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்திட
வேண்டும். என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிறந்த குழந்தைக்கு தடுப்பு ஊசி போட்ட பின்னர் ஊசியை அப்படியே அலட்சியமாக விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.