கோயம்புத்தூர்: கோவை மாவட்டம் சாடிவயல் அருகே உள்ள காருண்யா நிகர் நிலை பல்கலைக்கழகம். இப்பல்கலைக்கழகத்திற்கு தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் அதிகபட்ச அங்கீகாரமான A++ வழங்கியுள்ளது.
இது குறித்து காருண்யா நிகர் நிலை பல்கலைக்கழக வேந்தர் பால் தினகரன் கூறுகையில், "காருண்யா நிகழ்நிலை பல்கலைக்கழகம் 36 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இங்கு 8000 மாணவ மாணவியர் தங்கி படித்து வருகின்றனர். இந்த பல்கலைக்கழகத்தின் சிறப்பு, இந்தியா முழுவதும் இருந்து பேராசிரியர்கள் வந்து பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து கொண்டுள்ளனர்.
கிரிமினாலஜி, தடயவியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகள் கற்றுக் கொடுக்கப்படுகிறது. மாணவர்களுக்கு உயர்தர தங்கும் விடுதிகள் 700 ஏக்கர் பரப்பளவில் பல்கலைக்கழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதனை பாராட்டி A++ அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
![பல்கலைக்கழக வேந்தர் பால் தினகரன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-cbe-01-karunya-pal-dinakaran-byte-7208104_21082022212244_2108f_1661097164_1027.jpg)
இப்பல்கலைக்கழகத்தில் 25 கோடி ரூபாய் மதிப்பிலான செயல் திட்டங்கள் மத்திய அரசு மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பல்கலைக்கழகம் உயர்தரமாக இருப்பதால் அதிகமான மதிப்பீடு கொடுத்துள்ளார்கள்.
இதைத் தொடர்ந்து உலக அளவில் உயர்தர மதிப்பீடு வாங்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். தற்போது கிரிமினாலஜி, பாரன்சிஸ் சயின்ஸ் உள்ளிட்ட புதிய பாடத்திட்டங்கள் செயல்படுத்த வரும் நிலையில் இந்த மதிப்பீடு தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
![காருண்யா நிகர் நிலை பல்கலைக்கழகம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-cbe-2a-karunya-pal-dinakaran-visu-7208104_21082022222606_2108f_1661100966_899.jpg)
இதன் மூலம் சமுதாயத்துக்கு பல சேவைகள் செய்ய வாசல்கள் திறந்துள்ளது. வெளிநாட்டு மாணவர்கள் இங்கேயே வந்து படிக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டு வருகிறது. அதற்காக சிறப்பு தங்கும் விடுதிகள் அமைக்கும் பணி தொடங்க உள்ளது. அதிகமான ஊக்கத்தொகையும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இங்கு பயிலும் மாணவர்கள் நல்ல வேலை வாய்ப்புடன் வெளியே செல்கின்றனர்" என பால் தினகரன் தெரிவித்தார். இச்சந்திப்பின்போது சாமுவேல், பால் தினகரன், பல்கலைக்கழக பதிவாளர் எலிஜா பிளசிங் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: சென்னையில் கனமழை... விமான சேவை பாதிப்பு