ETV Bharat / city

'போராட்டத்தில் உயிரிழந்த உழவருக்கு ஒன்றிய அரசு இழப்பீடு தர வேண்டும்' - விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஒன்றிய அரசு தர வேண்டும்

போராட்டத்தில் உயிரிழந்த உழவருக்கு பெரும் இழப்பீட்டை ஒன்றிய அரசு தர வேண்டும் என்றும், தொடர்ந்து பொதுப்பணித் துறையை மீட்டெடுக்கும் போராட்டமானது தொடரும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஒன்றிய அரசு தர வேண்டும்

author img

By

Published : Nov 19, 2021, 2:00 PM IST

கோயம்புத்தூர்: கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டமானது நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இன்று (நவம்பர் 19) ஒன்றிய அரசு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார்.

இது குறித்து செய்தியாளரிடம் பேசிய பி.ஆர். நடராஜன், “வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெறும்வரை போராடிய அனைத்து உழவருக்கும் நன்றி. அவர்களுக்கு நாங்கள் தலை வணங்குகிறோம்.

மேலும், இந்தப் போராட்டத்தில் உயிரிழந்த உழவருக்குப் பெரும் இழப்பீடு ஒன்றிய அரசு தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறோம். இந்த வெற்றியைத் தொடர்ந்து பொதுப்பணித் துறையை மீட்டெடுக்கும் போராட்டம் விரைவில் நடைபெற உள்ளது” எனத் தெரிவித்தார்.

உழவருக்குப் பெரும் இழப்பீடு ஒன்றிய அரசு தர வேண்டும்

இதனைக் கொண்டாடும்விதமாக கோயம்புத்தூரில் கம்யூனிஸ்ட் கட்சியினர், காந்திபுரம் பகுதியில் இனிப்புகளை வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதையும் படிங்க: Govt to Repeal Farm laws: 'உழவர்களின் அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.