ETV Bharat / city

ஒப்பந்த மருத்துவர்களுக்கு பணி ஆணை வழங்கிய அமைச்சர் சக்கரபாணி

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட முதற்கட்டமாக 17 ஒப்பந்த அடிப்படை மருத்துவர்களுக்கு பணி ஆணையை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார்.

அமைச்சர் சக்கரபாணி
அமைச்சர் சக்கரபாணி
author img

By

Published : Jun 1, 2021, 2:36 PM IST

கோயம்பத்தூர்: கரோனா தொற்று நோயாளிகளுக்காக கொடிசியா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய படுக்கை வசதிகளை அமைச்சர் சக்கரபாணி நேரில் பார்வையிட்டார்.

கொடிசியா வளாகத்தில் அறிகுறிகள் இல்லாத கரோனா தொற்று நோயாளிகளுக்கு அலோபதி மற்றும் சித்த மருத்துவ முறைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. அங்குள்ள நான்கு அரங்குகளில் 1,286 படுக்கைகள் அமைக்கப்பட்டு உள்நோயாளிகள் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

இதில் 400 படுக்கைகளுக்கு கான்சன்ட்ரேட்டர்கள் மூலம் ஆக்சிஜன் வசதி அளிக்கப்பட்டுள்ளது. இதனைப் பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்ட உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி, கொடிசியா வளாகத்தில் நோயாளிகளுக்கு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ள வசதிகள் குறித்து இஎஸ்ஐ மருத்துவமனை முதல்வர் ரவீந்திரனிடம் கேட்டறிந்தார்.

அதேசமயம், இம்மாவட்டத்தில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்த ஒப்பந்த அடிப்படையில் 75 மருத்துவர்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக 15 மருத்துவர்களுக்கு 60 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் பணிசெய்ய ஆணையை அமைச்சர் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கோயம்புத்தூரில் அனைத்து அரசு அலுவலர்களும் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை பணிகளைச் சிறப்பாகச் செய்துவருகின்றனர்.

இம்மாவட்டத்தில் தற்போது நோய்த்தொற்றின் பாதிப்பு குறைந்துவரும் நிலையில், அதனை முற்றிலுமாக ஒழிக்க அனைவரும் உறுதி ஏற்றுக்கொள்ள வேண்டும்.

பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து வெளியில் வர வேண்டாம். நடமாடும் காய்கறி வாகனங்கள் மூலம் மக்களுக்கு காய்கறிகள் மளிகைப் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டுவருகிறது

அதனை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு எந்த வசதிகள் வேண்டுமானாலும் செய்துதருவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் தொடர்ந்து குறையும் கரோனா பாதிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.